வல்லமை கொண்டவரின் மகிமை அற்புதத்தை
செல்லுமிடமெல்லாம் நீ சொல்லித் துதித்துவிடு
கட்டுக்கடங்காது என் இயேசுவின் அன்பு வெள்ளம்
அள்ளிக் குடித்து விடு இந்த ஆனந்த ஜீவநீரை

நித்திய ஜீவன் வரும் இந்த நீரைக் குடிப்பவர்க்கே
சத்தியம் நெஞ்சில் வரும் உங்கள் சங்கடம் தீர்ந்துவிடும்
தப்பிதங்களை விட்டே உன் தவறினை அறிக்கையிட்டால்
அப்பொழுதே தீரும் பாவம் உன்னை விட்டே ஓடும்

சொல்லில் அடங்காது என் இயேசுவின் தூய அன்பு
துள்ளிக் குதித்தோடு அந்தத் தூயவரைத் தேடு
அன்பைப் பெருக்கியெங்கள் ஆருயிரைக் காக்கும்
இன்பப் பெருக்குமவர் இயேசு அன்பு வடிவானார்

பள்ளிக் குழந்தையைப்போல் வேதத்தைப் பாடம் பண்ணு
வள்ளல் அடியினுக்கே உன் வாழ்வைக் கொடுத்துவிடு
அல்லும் பகலுமவர் நாமத்தைப் பாடிவிடு
கல்லும் கனியாகும் என் கர்த்தரின் அன்பு கண்டு

கல்லும் கனியாகும் என் கர்த்தரின் அன்பு கண்டு…….