என் இயேசு ராஜா உம் நாமம் என்றும்
நான் பாட வரம் தாருமே
என் பாட்டின் நடுவில் கருவாகி நீரும்
உருவாகி வரவேண்டுமே
என் இயேசு ராஜா உம் நாமம் என்றும்
நான் பாட வரம் தாருமே
என் பாட்டின் நடுவில் கருவாகி நீரும்
உருவாகி வரவேண்டுமே
மண் தேடும் செல்வம் நிலையாது ராஜா
உம் வலது பாரிசமே
ஜீவனுள்ள உமது வார்த்தையொன்று போதும்
தேற்றிவிடும் தேவனே
மண் தேடும் செல்வம் நிலையாது ராஜா
உம் வலது பாரிசமே
ஜீவனுள்ள உமது வார்த்தையொன்று போதும்
தேற்றிவிடும் தேவனே
என் வாழ்வின் ஒளியை தருகின்ற ராஜா
பெருமானே வரம் தாருமே
திருச் சித்தம் கொண்டு எனைப்பாரும் தேவா
பேரின்பக் கன்மலையே
என் வாழ்வின் ஒளியை தருகின்ற ராஜா
பெருமானே வரம் தாருமே
திருச் சித்தம் கொண்டு எனைப்பாரும் தேவா
பேரின்பக் கன்மலையே
விசுவாசம் என்றும் அழியாது ராஜா
பரிசுத்த ஜீவியமே
நீர் தந்த உபதேச மொழியொன்று போதும்
இறைவா என் இயேசுநாதா
விசுவாசம் என்றும் அழியாது ராஜா
பரிசுத்த ஜீவியமே
நீர் தந்த உபதேச மொழியொன்று போதும்
இறைவா என் இயேசுநாதா








