Home பாடல்கள் இறைவா என்னைத் தெரிந்து

இறைவா என்னைத் தெரிந்து

இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ – உமது
அன்பைக் குறித்து பாடல் எழுதி
மகிமைப் படுத்த தானோ
இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ…

திசை மாறிய பறவை போல – நான்
அலைந்து திரிந்த போது
திசை மாறிய பறவை போல – நான்
அலைந்து திரிந்த போது
வழி நானே என்று வந்து
ஒளியைத் தந்த தேவா – எந்தன் இயேசுவே
வழி நானே என்று வந்து
ஒளியைத் தந்த தேவா – எந்தன் இயேசுவே

இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ

அலைபாயும் உமதன்பை நான்
அறிந்திடாத போது – அன்பு
அலைபாயும் உமதன்பை நான்
அறிந்திடாத போது – அன்பு
வலை போட்டு என்னைப் பிடித்து
வழிகாட்டிய தேவா – எந்தன் இயேசு
வலை போட்டு என்னைப் பிடித்து
வழிகாட்டிய தேவா – எந்தன் இயேசு

இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ – உமது
அன்பைக் குறித்து பாடல் எழுதி
மகிமைப் படுத்த தானோ
இறைவா என்னைத் தெரிந்து
கொண்டதும் ஏனோ…