அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
முன்பே எனக்காக நீர் பொழிந்த
அந்த அன்பை அனைவருடன் பரிமாறுவேன்
முன்பே எனக்காக நீர் பொழிந்த
அந்த அன்பை அனைவருடன் பரிமாறுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
கண்ணே எமக்காய் நீர் சிலுவையிலே
உம்மை ஒப்புக் கொடுத்த உயர் தெய்வமன்றோ
கண்ணே எமக்காய் நீர் சிலுவையிலே
உம்மை ஒப்புக் கொடுத்த உயர் தெய்வமன்றோ
பண்பே இல்லாத பாவியர்க்காய்
பண்பே இல்லாத பாவியர்க்காய்
நீர் பாரில் அவதரித்த இயேசுவல்லோ
நீர் பாரில் அவதரித்த இயேசுவல்லோ
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
மண்ணே உமதன்பை புரிந்திடவே
நீர் மனித அவதாரம் எடுத்தீரன்றோ
இந்த மண்ணே உமதன்பை புரிந்திடவே
நீர் மனித அவதாரம் எடுத்தீரன்றோ
என்னே உமதன்பு இயேசு நாதா
என்னே உமதன்பு இயேசு நாதா
இறைவா உமதன்பின் அடிமை நானே
என் இறைவா உமதன்பின் அடிமை நானே
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
முன்னே நீர் சென்ற அடிச்சுவட்டில்
உம்மை பின்னோக்கி வருகிறோம் இயேசு நாதா
முன்னே நீர் சென்ற அடிச்சுவட்டில்
உம்மை பின்னோக்கி வருகிறோம் இயேசு நாதா
பொன்னான போதனையை ஏற்றுக்கொண்டே
உம் பொன்னான போதனையை ஏற்றுக்கொண்டே
புது வாழ்வில் நடைபோட்டு வருகின்றோமே
புது வாழ்வில் நடைபோட்டு வருகின்றோமே
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்
அன்பே உமக்காக நான் பாடுவேன்
இந்த அவனியில் உம்மோடு நான் வாழுவேன்








