இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை
மரணமானாலும் ஜீவனானாலும் தேவதூதர்களானாலும்
அதிகாரங்கள் ஆனாலும்
இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை
பொய்யென்ற உலகத்தில் மெய் ஞான ஒளி வந்து
உந்தனைக் கரை சேர்க்குமே
பொய்யென்ற உலகத்தில் மெய் ஞான ஒளி வந்து
உந்தனைக் கரை சேர்க்குமே
கடுகளவு விசுவாசம் உன் மனதில் வந்திட்டால்
கர்த்தரின் அன்பு சேருமே
கடுகளவு விசுவாசம் உன் மனதில் வந்திட்டால்
கர்த்தரின் அன்பு சேருமே
இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை
தன் மந்தையில் உந்தனைச் சேர்த்திட
என் கர்த்தர் ஆவலாய் இருக்கின்றாரே
தன் மந்தையில் உந்தனைச் சேர்த்திட
என் கர்த்தர் ஆவலாய் இருக்கின்றாரே
மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்று
வாக்குத்தத்தங்கள் தந்தாரே
மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்று
வாக்குத்தத்தங்கள் தந்தாரே
இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை
நானே வழியும் சத்தியமும் என்றெம்மை
தான் வந்து வழி காட்டினாரே
நானே வழியும் சத்தியமும் என்று
தான் வந்து வழி காட்டினாரே
வீணே உன் வாழ்வை சீர்செய்து கொள்ளாது
ஏன் நொந்து மனம் வேகிறாய்
வீணே உன் வாழ்வை சீர்செய்து கொள்ளாது
ஏன் நொந்து மனம் வேகிறாய்
இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை
மரணமானாலும் ஜீவனானாலும் தேவதூதர்களானாலும்
அதிகாரங்கள் ஆனாலும்
இயேசுவின் அன்பை விட்டு நம்மைப்
பிரிப்பவன் யாரும் இல்லை








