இயேசுவே !….
ஊழியத்துக்காய் என்னை ஒப்படைக்கின்றேன் – இனி
ஜீவிக்கின்ற நாட்கள் எல்லாம் உமது
ஜீவிக்கின்ற நாட்கள் எல்லாம் உமது
வாலிபத்தில் எந்தன் நாட்களெல்லாம் – ஒரு
கேலிக் கூத்தைப் போலே ஆகிவிட்டதே
வாலிபத்தில் எந்தன் நாட்களெல்லாம் – ஒரு
கேலிக் கூத்தைப் போலே ஆகிவிட்டதே
உமது ஜீவனுள்ள வார்த்தையினால் மீட்கப்பட்டதும்
என் நெஞ்சமேல்லாம் உந்தனையே தேடுதய்யா
உமது ஜீவனுள்ள வார்த்தையினால் மீட்கப்பட்டதும்
என் நெஞ்சமேல்லாம் உந்தனையே தேடுதய்யா
எங்களுக்காய் பாவந்தனை சுமந்துகொண்டு
நீர் பட்டதுயர் எந்நெஞ்சத்தையே வாட்டுதய்யா
எங்களுக்காய் பாவந்தனை சுமந்துகொண்டு
நீர் பட்டதுயர் எந்நெஞ்சத்தையே வாட்டுதய்யா
இனிக் கொஞ்ச நேரம் கூட வீணாக்கிடாமல்
உமது சந்தோஷத்தை மக்களுக்கு இசைத்திடுவேன்
இனிக் கொஞ்ச நேரம் கூட வீணாக்கிடாமல்
உமது சந்தோஷத்தை மக்களுக்கு இசைத்திடுவேன்
எம்மையெல்லாம் மீட்டெடுத்த கன்மலையே
உம்மை நன்றியுடன் ஸ்தோத்தரித்து துதித்திடுவோம்
எம்மையெல்லாம் மீட்டெடுத்த கன்மலையே
உம்மை நன்றியுடன் ஸ்தோத்தரித்து துதித்திடுவோம்
தந்துவிடும் பரிசுத்த வல்லமையை
அந்தத் தாலந்துகளால் உம்மை மகிமை செய்வோம்
தந்துவிடும் பரிசுத்த வல்லமையை
அந்தத் தாலந்துகளால் உம்மை மகிமை செய்வோம்