Home பாடல்கள் இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல்

இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல்

இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல்
எழுது மகனே என்றார் – என்
நாமம் மகிமைபெற செல்லுமிடமெல்லாம்
பாடு மகனே என்றார்
இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல்
எழுது மகனே என்றார் – என்
நாமம் மகிமைபெற செல்லுமிடமெல்லாம்
பாடு மகனே என்றார்

நல்ல மேய்ப்பன் என் பாடல் உனக்குத்
தினம் நம்பிக்கை தந்துவிடும் – என்
வார்த்தையில் தினமும் கீழ்ப்படிந்தால்
உனக்குச் சீரிய வாழ்வமையும்
நல்ல மேய்ப்பன் என் பாடல் உனக்குத்
தினம் நம்பிக்கை தந்துவிடும் – என்
வார்த்தையில் தினமும் கீழ்ப்படிந்தால்
உனக்குச் சீரிய வாழ்வமையும்

உவமைகளால் என் உதட்டினைத் தினமும்
உனக்காய்த் திறந்து வைப்பேன் – அந்த
உண்மை நிலை உணர்ந்து உலகில் வாழ்பவர்க்கு
உன்னதப்பாட்டெழுது
உவமைகளால் என் உதட்டினைத் தினமும்
உனக்காய்த் திறந்து வைப்பேன் – அந்த
உண்மை நிலை உணர்ந்து உலகில் வாழ்பவர்க்கு
உன்னதப்பாட்டெழுது

நன்மை கிருபைகளை நாளும் உனக்காக
தந்திட நான் மறவேன் – தினம்
என்னை இயேசுவென மகிழ்ந்து பாடுமுந்தன்
மனக்குறை நான் அறிவேன்
நன்மை கிருபைகளை நாளும் உனக்காக
தந்திட நான் மறவேன் – தினம்
என்னை இயேசுவென மகிழ்ந்து பாடுமுந்தன்
மனக்குறை நான் அறிவேன்