பெப்ரவரி 10
“என் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது.” சங். 63:1
தேவன் தன் பட்சத்திலிருக்கிறாரென்று அறிந்துகொள்வது மாத்திரம் ஒரு கிறிஸ்தவனுக்கு போதாது. அவர் சமுகத்தை அவன் தரிசத்து, அவரோடு இன்பமாய் இசைந்து அவருடைய அன்பை ருசிக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவில் அவன் புதிதாய்ப் பிறந்தபடியால் தேவன் கொடுக்கும் ஈவுகளின்மேல் வாஞ்சையடைய வேண்டும். அவராலன்றி அவன் ஆசைகள் நிறைவேறாது. தேவனுடைய இனிய முகத்தை நாடி வாஞ்சித்து, அதுவே தன் சந்தோஷம் என்று அறிந்து ஆனந்தங்கொள்ள வேண்டும். நீ ஆண்டவரின் முகத்தைக் காணாதுப்போவாயானால் சீக்கிரம் சேர்ந்துதுப்போவாய்.
தேவ வாக்கியங்களில் தேவனைக் காணாவிட்டால் அனலற்ற வெளிச்சம்போலவும், விசேஷித்த சிலாக்கியமாய்க் கர்த்தரைக் காணாவிட்டால் ஜீரத்தினால் பீடிக்கப்பட்டவனுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிற காய்கறிகளைப்போலவும் தோன்றும். தேவன்தான் ஒருவனுக்கு ஜீவன். இயேசுதான் ஒருவனுக்கு உயிர். கர்த்தருக்குள் சந்தோஷப்படுதலதான் அவன் பெலன். ஒருவன் தேவனைக் காணாவிட்டால் உயிரற்றவன். வியாதியஸ்தன். துக்கம் நிறைந்தவன். பாடுகளுள்வன்.
அன்பரே, இது உன் அனுபவமா? வெறும் அறிவும், வீண் சடங்குகளும், தெய்வ அனலை ஊட்டாத மார்க்கமும், உனக்கு மன திருப்தியை கொடுக்குமா? அப்படியிருக்குமானால் உன் நிலை சந்தேகத்திற்குரியது. தேவனில்லா மார்க்கத்தைப் பற்றியும், தேவனோடு பேசி உறவு கொள்ளாத மார்க்கத்தைப்பற்றியும் எச்சரிக்கையாயிரு.
உம்மேல் தாகமாய்
ஏங்குதே என் ஆத்துமா
என் சமீபமாய் வாரும்
அப்போ தென்வாஞ்சைகள் தீரும்.