டிசம்பர் 30
மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். (சங்.19:12)
ஓர் உண்மை கிறிஸ்தவன்தான் இப்படி ஜெபம் செய்வான். தேவனால் அறிவுறுத்தப்பட்டவர்களே, தங்கள் இருதயத்தைச் சரியாய் அறிந்துகொள்ள முடிந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதும் பரிசுத்தத்தையே விரும்புவார்கள். சிலர் பாவத்தினின்று விடுதலையாவதை விரும்புவார்கள். ஆனால், அவர்கள் பரிசுத்தம் ஆகவேண்டுமென்ற ஆசையில்லாதவர்களாதலால், தங்கள் பாவத்தை தேவனுக்கு முன்பாகத் தெளிவாய், வெளியரங்கமாக அறிக்கைசெய்வதில்லை. ஆனால், அறிக்கை செய்பவரோ பாவத்தினின்றும், அசுத்தத்தினின்றும் விடுதலை பெற்றுவிடுகிறார்கள். தேவன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, அவர்களுடைய பாவக்கறைகளையெல்லாம் நீக்குகிறார். அப்பொழுது மறைவான குற்றங்களும் மறைந்துவிடுகின்றன.
நம்மில் உள்ள பாவங்கள் நமக்குக் கவலையை உண்டாக்கி சுயவிருப்பங்களை நம்மில் வளர்த்து, பரம சிந்தையே இல்லாமல் செய்துவிடுகின்றன. ஆனால், குற்றங்கள் நீங்கலாகிவிடும்போது, இரட்சகரின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரித்து விடுகிறது. திரும்பவும் குற்றத்தில் விழாதபடி தூயஆவியானவர் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகிறார். நம்முடைய இருதயத்தை நாம் பாவங்களிலிருந்து காத்துக்கொள்ளவேண்டுமானால், நாம் தூய ஆவியானவரால் நிரப்பப்படவேண்டும். உள்ளும் புறமும் நாம் சுத்தமாயிருக்கவேண்டுமானால் தூயஆவியானவர் நம்மில் நிறைந்து நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். இது மிகவும் முக்கியம். கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மட்டுமே இந்த அனுபவத்தைப் பெறமுடியம். இந்த அனுபவத்தை நாமும் அடைக்கூடும் என்று வேதம் கூறுகிறது. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல் ஆவியில் நிறைந்திருங்கள்“ தேவன் தரும் ஈவுகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.
என் பாவம் அதிகம், ஆண்டவா,
என் குற்றங்கள் அனந்தம்,
எல்லா பாவங்களையும் நீக்கும்,
என் அந்தரங்க பாவங்களையும்.