Home பாடல்கள் இதயத் தூய்மையோடு எங்கள் இயேசுவை

இதயத் தூய்மையோடு எங்கள் இயேசுவை

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு
மனதில் நீங்கும் துன்பம்
துயர் நீங்க வந்த தங்கம்
இயேசு யூத ராஜ சிங்கம்
இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

வானத்திலும் பூமியிலும் மகிமையுள்ள தேவன்
இயேசு வார்த்தையோடு மாமிசமாய் வந்த நல்ல யூதன்
வாக்குகளைத் தந்து நம்மை காக்கும் நல்ல நாதன்
தம்மில் வாஞ்சையுள்ள அடியவராய் மனந்திருப்பும் நேசன்

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

புதியதொரு வாழ்வைத் தர இயேசுவிடம் கேளு
இந்த மனித வாழ்வின் நடைமுறைக்கு வழிவகுத்தவர் யாரு
தினமுமவர் நாமத்தினால் தரிசனங்கள் கூறு
இயேசு மனந்திரும்பு என்று மட்டும் சொல்லுகிறார் பாரு

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

அன்பு கூர்ந்து மனுக்குலத்தை மீட்க வந்த நாதன்
இயேசு ஆவியிலே தரிசனமாய் உயிர்த்தெழுந்த ஜீவன்
ஆண்டவராய் அவனியிலே வந்துதித்த பாலன்
இயேசு மீண்டுமொரு தலைமுறைக்கு வரவிருக்கும் தேவன்

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு