பெப்ரவரி 01
“தம்மைச் சேர்ந்த ஜனம்.” சங்.148:14
இயேசு நம்மைப்போல மனுஷ சாயல் கொண்டு நம்மில் ஒருவராய் பூமியில் வாசம்பண்ணி நம்மைச் சேர்ந்தவரானார். அவர் தமது பரிசுத்தாவியைத் தந்து நம்மோடு ஐக்கியப்படும்போது நாம் அவரைக் சேர்ந்தவர்களாகிறோம். இது நமக்குக் கிடைத்த மேலான கனம். நமது சமாதானத்திற்கும் பாக்கியத்திற்கும் இது வற்றாத ஊற்று. நாம் அவருடைய பிள்ளைகளானால் அவரோடு ஐக்கியப்பட்டவர்களாகிவிடுகிறோம். நாம் அவரின் எலும்பில் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமுமானபடியால், அவரோடு ஒன்றாய் ஐக்கியப்பட்டிருக்கிறோம். ஒரு மனிதன் தன் நண்பனோடு பழகுவதுப்போல் தேவன் நம்மோடு சஞ்சரித்து ஐக்கியப்படுகிறார். அவர் தினம் தினம் நம்மைக் காத்து விசாரிக்கிறபடியால் அவருடைய கரிசனையில் ஐக்கியப்படுகிறோம். நமக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணும்போது அவரோமு இருப்பிடத்திலும் ஐக்கியப்படுகிறோம். நாம் மரிக்கும்போது அவருடன் அதிக ஐக்கியத்தில் பங்குள்ளவர்களாவோம்.
நாம் ஏழைகளாயிருந்தாலும் துன்பப்படும்போது அவரோடு ஐக்கியப்பட்டிருக்கிறோம். நாம் அவரோடு ஐக்கியப்பட்டிருந்தால் நாம் துன்பப்படும்போது நமக்குத் துணை நின்று, சகல மோசங்களிலும் நம்மை ஆதரித்து, தனிமையாயிருக்கும்போது ஆறுதல் சொல்லி, நம்மோடு பேசி, தேவைப்படும்போதெல்லாம் தேவையானதைத் தந்து மகிமைப்படுத்துவார். தினம்தோறும் நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருந்தால் அவரும் நம்மோடு ஐக்கியப்பட்டிருப்பார் என்பதை உணர்ந்துக் கொண்வோமாக.
நான் தேவனுடைய பிள்ளையா?
அவர் என் நேசரா?
விசுவாசத்தோடு ஜெபிப்பேன்
அவரை ஆரோசித்து நடப்பேன்.