முகப்பு தினதியானம் நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்

நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்

பெப்ரவரி 12

“நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்.” சங். 71:14

இப்படித்தான் நான் தைரியமாய் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். ஏனென்றால் என் நம்பிக்கை அஸ்திபாரமானது, என்றும் மாறாமல் நிலையாய் நிற்கிறது. கிருபை நிறைந்த என் தேவனுடைய தகுதிகளும் அவருடைய வசனத்தில் கண்டிருக்கும் உண்மை வாக்குகளும் அதில் எழுதியிருக்கிறது. தேவனுடைய பக்தருடைய வாழ்க்கையிலும் என் அனுபவத்திலும் கண்மறிந்ததும், சகலமும் எப்போதும் தேவனிடம் நம்பிக்கைக் கொண்டிருக்க என்னை உற்சாகப்படுத்துகின்றன. என் அக்கிரமத்திற்கு தேவன் இறங்குவார். சகல துன்பத்திலும் என்i னஆதரிப்பார். சமயத்திற்கேற்ப உதவி செய்து என்னை விடுவிப்பார். எனக்கு வரும் எல்லா தீயக் காரியங்களிலிருந்தும் நன்மை பிறக்கும். இயேசுவானவர் தோன்றும்போது எனக்குத் தயை கிடைக்கும். நித்தியஜீவன் எனது படைபங்காயிருக்குமென்று நம்பிக்கைக் கொண்டிருப்பேன். இந்த நம்பிக்கை மட்டும் இல்லையேல் நான் நிர்மூலமாகிவிடுவேன். வீண் கவலை என்னை நெருக்கி, அவநம்பிக்கை என் மனதை மூடினாலும் நான் அவரையே நம்பிக்கொண்டிருப்பேன்.

இப்படி நான் நம்புவதால் நம்பிக்கையின் தேவ னைக் கனப்படுத்துகிறோம். வருங்காரியங்கள் வெளிச்சமாய் இருக்கும். இது ஜெபத்திற்கும் முயற்சிக்கும் நம்மை தூண்டி விடுகின்றது. நமது ஜீண காலத்தை இனிமையாக்குகிறது. ஆனால் ஒன்றை நான் மறந்துவிடக்கூடாது.. என் நம்பிக்கை பரீட்சிக்கப்படும். தேவனும் என்னை ஆராய்வார். சாத்தானும் என்னைச் சோதிப்பான். ஆனாலும் நல்ல நம்பிக்கையானது பிழைத்து பலத்த காரியம் நடைபெற கிரியை செய்யும். நான் ஏன் அவநம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டும்? நான் பயப்படேன். அதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?

காற்றடித்தாலும் கொந்தளித்தாலும்
என் ஆத்துமா உம்மைப் பற்றும்
அப்போ என் மனம் சுகித்து
உம்மில் வாழ்ந்து களிக்கும்.