மார்ச் 02
“கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.” பிலி. 4:5
இயேசு கிறிஸ்து வரப்போகிறார். அவர் வருகிற நாள் தெரியாது. ஆகையால் நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். அவர் சீக்கிரம் வருவார். உண்மையாய் வரத்தான் போகிறார் என்று உணர்ந்தோமானால், சாம் இப்போது இருக்கிறதுபோல் அடிப்படி உலக காரியங்களில் சிக்கிக்கொள்ள மாட்டோம். உலகத்துக்குரியவைகளைச் சிந்திக்காமல் தினமும் பரலோகத்தை நினைத்து ஏங்குகிறவர்களாய் இருப்போம். உலகை நியாயந்தீர்க்கவும், நமது பிள்ளைகளை ஒன்று சேர்க்கவும், அவனவன் செய்த கிரியைகளுக்குத் தக்க பலன் தரவும், அவர் சீக்கிரம் வரப்போகிறார்.
அந்த நாள் சமீபமாயிருக்கிறதென்று உணர்ந்தோமானால் சோதனையில் அது நம்மைப் பாதுகாக்கும். பின்மாறாதபடி தடுக்கும். நமது பயபக்தியையும் பரம சிந்தையையும் அதிகமாக்கும். அவரையே Nநூக்கியிருக்க செய்யும்: அவருக்காக நம்மை ஆயத்தப்படுத்தும்.
நாமோ! அவரை வாரும் இயேசுவே என்று அழைத்து அவரின் வருகைக்காய் வாஞ்சையோடு காத்திருக்க வேண்டும். அவர் வரும் போது கிருபையை தம்முடன் கொண்டு வருவார். நம்மை தம்முடன் சேர்த்துக்கொள்வார். சத்துருக்களை நாசம்பண்ணுவார். நம்மைத் தமது சாயலுக்கொப்பாய் மாற்றுவார். இயேசுவானவர் வரும்போது அவரின் ஜனங்கள் பூரண பாக்கியவான்களாய் இருப்பார்கள். அழுகை இன்பமாயும், துயரங்கள் ஸ்தோத்திர கீதங்களாயும் மாறும். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும். சீக்கிரம் வாரும் என்று அழைப்போம்.
வாரும் இயேசுவே வாரும்
உமது மகிமையைக் காட்டும்
அதை நாங்கள் கண்ணாய் கண்டு
கையில் பொற் கின்னரம் கொண்டு
ஜெயம் ஜெயம் என்று
வாழ்த்திப் போற்றிப் பாடுவோம்.