அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே
அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே
உபத்திரவங்கள் நிறைந்த உலகம்
உன்னைத் துன்பப்படுத்தும் – அதை
ஜெயித்த இறைவன் அழைப்பை ஏற்று
விரைந்து வா மகனே
உபத்திரவங்கள் நிறைந்த உலகம்
உன்னைத் துன்பப்படுத்தும் – அதை
ஜெயித்த இறைவன் அழைப்பை ஏற்று
விரைந்து வா மகனே
அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே
உயிரைத் தந்து உலகில் உன்னை
உலவவிட்ட இறைவன் – இன்று உன்
அழுக்கை நீக்கி ஆத்துமாவை
தேற்றவே அழைக்கிறார்
உயிரைத் தந்து உலகில் உன்னை
உலவவிட்ட இறைவன் – இன்று உன்
அழுக்கை நீக்கி ஆத்துமாவை
தேற்றவே அழைக்கிறார்
அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே
பதுக்கிப் பொருளை சேர்க்கும் உலகில்
பாவம் குறைந்திடுமா – சிலுவை
சுமக்கும் இயேசு கிருபையின்றி
மீட்பும் அடைந்திடுமா
பதுக்கிப் பொருளை சேர்க்கும் உலகில்
பாவம் குறைந்திடுமா – சிலுவை
சுமக்கும் இயேசு கிருபையின்றி
மீட்பும் அடைந்திடுமா
அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே








