மார்ச் 20
"கிறிஸ்துவுடன் எழுந்திரு." கொலோ. 3:1
இயேசுவானவர் நமது பிணையாளியாகையால் நமக்கு பதிலாக மரித்தார். தம்முடைய ஜனங்கள் எல்லார் சார்பாகவும் மரித்தார். அப்படியே எல்லாருக்காகவும் உயிர்த்தெழுந்தார். அவர் மரித்தபோது அவருடைய ஜனங்கள் எல்லாரும் மரித்தார்கள்....