பாடல்கள்

Home பாடல்கள்

விசுவாசிகளே விசுவாசிகளே

விசுவாசிகளே விசுவாசிகளே
விரைந்து வாருங்களே
மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை
மகிழ்ந்து பாடுங்களே
விசுவாசிகளே விசுவாசிகளே
விரைந்து வாருங்களே
மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை
மகிழ்ந்து பாடுங்களே

                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே
                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே

சத்துருவினால் வரும் பயத்தினை நீக்கிச்
சங்கீதம் பாடுங்களே
தாவீதின் சங்கீதப் பாடலைப் பாடி
கீர்த்தனம் செய்யுங்களே
சத்துருவினால் வரும் பயத்தினை நீக்கிச்
சங்கீதம் பாடுங்களே
தாவீதின் சங்கீதப் பாடலைப் பாடி
கீர்த்தனம் செய்யுங்களே

 

                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே
                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே

துதிக்கின்ற பாடலைக் கேட்டிடக் கர்த்தர்
எழுந்து வருவாரே இங்கே
துதிகளின் மத்தியில் வாழ்ந்திடும் இயேசு
மகிழ்ந்து வருவாரே
துதிக்கின்ற பாடலைக் கேட்டிடக் கர்த்தர்
எழுந்து வருவாரே இங்கே
துதிகளின் மத்தியில் வாழ்ந்திடும் இயேசு
மகிழ்ந்து வருவாரே

 

                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே
                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மறுபடி மீண்டும் வருவதாய் சொல்லி
மாமறை வேதம் தந்தார்
திரு மாமறை வேதம் தந்தார்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
அழிவில்லா ஆனந்த ஜீவனை நீயும்
அவருக்காய் கொடுத்துவிடு
உன்னை அவருக்காய் கொடுத்துவிடு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
மறுபடி வருகின்ற மனுக்குல வேந்தனின்
வருகையைக் காத்து இரு
அவர் வருகையைக் காத்து இரு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு நீ ஓடியே வந்துவிடு

அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
உனக்கென்று வழியைக் காட்டிய இயேசுவின்
நாமத்தைத் தொழுதுவிடு
அவரின் நாமத்தைத் தொழுதுவிடு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஒடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

எனையாளும் இயேசு நாதா

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

படு பாவியான எம்மை
பரிசுத்தமாக்கினீரே
படு பாவியான எம்மை
பரிசுத்தமாக்கினீரே
கணமேனும் உமது அன்பை
மறவாத மனத்தைத் தாரும்
கணமேனும் உமது அன்பை
மறவாத மனத்தைத் தாரும்
இனிமேலும் உமது வழியில்
எம்மை வழுவாது காத்துக் கொள்ளும்
இனிமேலும் உமது வழியில்
எம்மை வழுவாது காத்துக் கொள்ளும்

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

தாயின் கருவில் எம்மை
நீர் முன்னறிந்து கொண்டதாலே
தாயின் கருவில் எம்மை
நீர் முன்னறிந்து கொண்டதாலே
இன்றெம்மைச் சேர்த்துக் கொண்டீர்
இறைநாமம் பாட வைத்தீர்
இன்றெம்மைச் சேர்த்துக் கொண்டீர்
இறைநாமம் பாட வைத்தீர்
நிறைவான ஆசி தந்து
எமைக் காக்க வாரும் தேவா
நிறைவான ஆசி தந்து
எமைக் காக்க வாரும் தேவா

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

அன்பின் வழியைக் காட்டி
அடைக்கலம் தந்ததாலே
அன்பின் வழியைக் காட்டி
அடைக்கலம் தந்ததாலே
நன்றியோடு துதி செய்வோம்
ஸ்தோத்திரங்கள் சொல்ல வந்தோம்
நன்றியோடு துதி செய்வோம்
ஸ்தோத்திரங்கள் சொல்ல வந்தோம்
மகிழ்வோடு உமது வழியில்
களி கூர்ந்து நடந்து வந்தோம்
மகிழ்வோடு உமது வழியில்
களி கூர்ந்து நடந்து வந்தோம்

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

அன்புள்ளங்கள் இங்கே கூடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது

வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது….

வழி நடத்த வாரும் இயேசுவே

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

பழியைச் சுமந்து நாங்கள்
பாவக் கடலில் மூழ்கினோமே
பழியைச் சுமந்து நாங்கள்
பாவக் கடலில் மூழ்கினோமே
எமது படகைச் செலுத்தி
அன்புக் கரையில் சேர்க்க வாரும்
எமது படகைச் செலுத்தி
அன்புக் கரையில் சேர்க்க வாரும்

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

ஐம்புல ஆசைகளால்
தினமும்  அடிமையாகிப் போனோம்
ஐம்புல ஆசைகளால்
தினமும்  அடிமையாகிப் போனோம்
எங்களின் நாயகனே
சத்திய வழியைக் காட்டித் தாரும்
எங்களின் நாயகனே
சத்திய வழியைக் காட்டித் தாரும்

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

சுதந்திர புருஷர்களாய் உமக்குச்
சொந்த ஜனங்களாக வேண்டும்
சுதந்திர புருஷர்களாய் உமக்குச்
சொந்த ஜனங்களாக வேண்டும்
உமது சுகந்தரும் வார்த்தையினால்
நாங்களும் சுகத்தை அடைய வேண்டும்
உமது சுகந்தரும் வார்த்தையினால்
நாங்களும் சுகத்தை அடைய வேண்டும்

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

அப்பழம் உண்ணாதே என்று சொல்லி
ஆண்டவர் கட்டளை ஒன்றைக் கொடுத்திருந்தும் ஆ… ஆ….
கட்டளை மீறிய காரணத்தால்
எம்மைத் தொட்டது தொடர்ந்தொரு பாவங்களே ஆ… ஆ….
பாவத்தின் சம்பளம் மரணம் என்றார்
கர்த்தர் பாவியை இரட்சிக்க விரைந்து வந்தார்
பாடுகள் வேதனைத் துயர் அடைந்தார்
இயேசு பாவத்தைச் சிலுவையாய் சுமந்து வந்தார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

இத்தனை கொடுமைக்கும் ஆளாகி
இயேசு இரக்கத்தின் தேவனாய் உயிர்த்தெழுந்தார் ஆ… ஆ….
மனுக்குலம் காத்திட மறுபடியும்
தாம் வருவதாய் கூறியே இறையானார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

உத்தமமானவரின் உபதேசம்

உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே
உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
இப்பவும் உனைக் காக்க துணையாகுதே
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
இப்பவும் உனைக் காக்க துணையாகுதே
உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே

சுத்தமுள்ள ஒரு ஜீவியமும்
தூய்மையுள்ள ஒரு ஊழியமும்
சுத்தமுள்ள ஒரு ஜீவியமும்
தூய்மையுள்ள ஒரு ஊழியமும்
கர்த்தருக்கென்றே செய்து கொண்டு
கர்த்தருக்கென்றே செய்து கொண்டு
அவர் காட்டிய பாதையில் சென்றிடுவோம்
கர்த்தருக்கென்றே செய்து கொண்டு
அவர் காட்டிய பாதையில் சென்றிடுவோம்
உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே

எத்தனை துன்பத்தை நீக்கியவர்
செய்யும் அற்புதங்களுக்கு அளவே இல்லை
எத்தனை துன்பத்தை நீக்கியவர் செய்யும்
அற்புதங்களுக்கு அளவே இல்லை
நித்தமும் அவர் செய்யும் அதிசயங்கள்
நித்தமும் அவர் செய்யும் அதிசயங்கள்
நம்மை வாழ்விக்கச் செய்யும் பரிகாரங்கள்
நித்தமும் அவர் செய்யும் அதிசயங்கள்
நம்மை வாழ்விக்கச் செய்யும் பரிகாரங்கள்

உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே
உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
இப்பவும் உனைக் காக்க துணையாகுதே
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
இப்பவும் உனைக் காக்க துணையாகுதே
உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே….

பேரின்பக் கன்மலையே என்னை

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
யாரையும் நம்பி விடேன்  இந்த
நானில மீதினிலே
யாரையும் நம்பி விடேன்  இந்த
நானில மீதினிலே
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

தேசத்தை விட்டு வந்தேன் பிள்ளைப்
பாசத்தையும் பிரிந்தேன்
நேசத்தைத் தந்து என்னை இங்கு
மீட்டவரே வாரும்
ஆயனே இங்கு வந்து  என்னை
ஆதரித்துக் கொள்ளும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

வேதத்தில் மனம் லயித்தேன் உமது
போதனையில் திளைத்தேன்
என் மகனே என்று என்னை நீர்
கூப்பிட்ட குரல் கேட்டேன்
அந்நியன் என்றே என்னை கணமும்
தள்ளி விடாதேயும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

அந்தி பகல் மறையும் அப்பா உன்
ஆறுதல் மறைந்திடுமோ
மந்திர மாயமெல்லாம் உமது
மலரடி கண்டிடுமோ
ஐயனே அழைக்கின்றேன் என்
அருகினில் வாருமையா

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே …

கல்வாரி அழைக்குது உம்மை

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே
பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே
ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே
பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை ஆ… ஆ… ஆ…

இயேசு தம்மை சிலுவையிலே
கொன்றிட்ட பாவியரை மன்னிக்கவே
மன்றாடி ஜெபித்த மனுக்குல தேவா
மன்றாடி ஜெபித்த மனுக்குல தேவா
நின் கருணைக்கு ஈடில்லையே
நின் கருணைக்கு ஈடில்லையே

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை ஆ… ஆ… ஆ…

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால்
பாவமில்லாத நீர் மரித்ததும் ஏன்
பாவத்தின் சம்பளம் மரணம் என்றால்
பாவமில்லாத நீர் மரித்ததும் ஏன்
பாவிகள் மேல் கொண்ட பாசத்தாலோ
பாவிகள் மேல் கொண்ட பாசத்தாலோ
கொடுமையின் கோரத்தைச் சகித்தீரோ
கொடுமையின் கோரத்தைச் சகித்தீரோ

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே
பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே ஆ… ஆ… ஆ…

இதயத் தூய்மையோடு எங்கள் இயேசுவை

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு
மனதில் நீங்கும் துன்பம்
துயர் நீங்க வந்த தங்கம்
இயேசு யூத ராஜ சிங்கம்
இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

வானத்திலும் பூமியிலும் மகிமையுள்ள தேவன்
இயேசு வார்த்தையோடு மாமிசமாய் வந்த நல்ல யூதன்
வாக்குகளைத் தந்து நம்மை காக்கும் நல்ல நாதன்
தம்மில் வாஞ்சையுள்ள அடியவராய் மனந்திருப்பும் நேசன்

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

புதியதொரு வாழ்வைத் தர இயேசுவிடம் கேளு
இந்த மனித வாழ்வின் நடைமுறைக்கு வழிவகுத்தவர் யாரு
தினமுமவர் நாமத்தினால் தரிசனங்கள் கூறு
இயேசு மனந்திரும்பு என்று மட்டும் சொல்லுகிறார் பாரு

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

அன்பு கூர்ந்து மனுக்குலத்தை மீட்க வந்த நாதன்
இயேசு ஆவியிலே தரிசனமாய் உயிர்த்தெழுந்த ஜீவன்
ஆண்டவராய் அவனியிலே வந்துதித்த பாலன்
இயேசு மீண்டுமொரு தலைமுறைக்கு வரவிருக்கும் தேவன்

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

Popular Posts

My Favorites

ஏன் சஞ்சலப்படுகிறாய்

நவம்பர் 02 "ஏன் சஞ்சலப்படுகிறாய்" 1.சாமு. 1:8 அன்பும் பாசமும் நிறைந்தஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறான். நாம் நம்மிடம் இக்கேள்வியை ஆண்டவர்தாமே கேட்பதுபோல எடுத்துக்கொள்வோம். ஏன் சஞ்சகப்படுகிறாய்? பாவத்தினால் துன்பமடைந்து சஞ்சலப்படுகிறாயா?...