வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்
காலமெல்லாம் என்னைக் காக்கும் கவசமானதே
வார்த்தையென் கால்களுக்கு வெளிச்சமாகி
வழியைக் காட்டுதே – நல்ல
வழியைக் காட்டுதே
வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்
நீதியுள்ள பாதைதனை வேதம் காட்டுதே – நமக்கு
நேர்மையான காரியத்தை நினைவு மூட்டுதே
ஆதியிலே வார்த்தையாக தேவன் வந்தாரே
நமக்கு ஆண்டவர் நான் என்று சொல்லி
அறிவைத் தந்தாரே – நல்ல
அறிவைத் தந்தாரே
வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்
தேவன் ஒன்றே என உலகம் தெரிந்து கொள்ளட்டுமே
நம்மைத் தேடிவரும் தெய்வம் இயேசு என உணரட்டுமே
நம் பாடுகளை அனுபவித்த பரமபிதாவின்
ஜீவ வார்த்தைக்குத்தான் மதிப்பளித்து
கீழ்ப்படியட்டுமே – உலகம்
கீழ்ப்படியட்டுமே
வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்








