முகப்பு தினதியானம் மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக

மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக

பெப்ரவரி 26

“மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக.”  வெளி 2:5

மனந்திரும்புதலுக்குச் சிந்தனை தேவை. நடத்தையைப்பற்றியும், தன் நிலைமையைப்பற்றியும் பயபக்தியாய் சிந்திக்கிற சிந்தனை வேண்டும். அது பாவத்தைப்பற்றி உணர்வதில் ஏற்படுகிறது. தேவனுக்கு முன்பாக நம்முடைய தன்மை பாவ கரையுள்ளது என்று அறிய வேண்டும். இந்தச் சிந்தனை வந்தால்தான் பாவத்தைவிட்டு, பாவ மன்னிப்பைப் பெற்று சமாதானம் பெற வழியுண்டாகும். இந்த எண்ணத்தில் உள்ளான துக்கமும் அடங்கியிருக்கிறது. இந்த மன வருத்தம், கர்த்தருக்கு மனஸ்தாபத்தை உண்டாக்கிப் போட்டோமே. அவரை அவமதித்து அவர் இரக்கத்தை புறக்கணத்தோமே என்ற விசனத்தை உண்டாக்கும்.

இந்த வருத்தம் தான் நம்மை சீர்வாழ்வுக்கும், இரட்சிப்புக்கும் வழி நடத்தும். உண்மையான மனஸ்தாபமில்லாமல் ஒருவேளை வாழ்க்கை நடத்தலாம். ஆனால், நல்வாழ்கை நடத்த வேண்டுமானால், உண்மை மனஸ்தாபம் வேண்டும். நமது வழிகளைக் குறித்துச் சிந்தித்து, நமது பின்மாற்றத்தை யோசித்து, குற்றங்களை ஒப்புக்கொண்டு, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்யத் தொடங்குவோமாக. கிறிஸ்துவை நோக்கி பார். தேவனுக்குக் காத்திரு. வசனத்தை ஆராய்ந்து பார். அவர் கட்டளைகளைக் கைக்கொள். இயேசுவை குறித்து மற்றவர்களாடு பேசு. முன்பு செய்ததுப்போல் தீமையாய் தோன்றுகிறவைகளை விட்டு விலகு. இப்படிச் செய்வதனால் அன்பும், வைராக்கியமும், விழிப்புணர்ச்சியும், பயப்கதியும், ஒப்புவித்தலும் நம்மில் மிகுதியாய்க் காணப்படும். நம்முடைய வழிகளை ஆராய்ந்து அவரிடத்தில் திரும்புவோமாக. இயேசு கிறிஸ்துவைக் கனக்குறைச்சல் படுத்தினோம் என்று முறையிடுவதோடு, மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கடந்த காலத்தை நினை
ஆதி அன்பைக் காட்டு
முந்தின கிரியை செய்
அவரில் ஆறுதலடை.