முகப்பு தினதியானம் ஏப்ரல் பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்

பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்

ஏப்ரல் 27

“பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்”  எபேசி. 1:5-6

இயேசுகிறிஸ்துவானவர்தான் இப்பிரியமானவர். அவரின் பிதாவோ இவரை அளவற்றவிதமாய் நேசிக்கிறார். அவரை அவர் ஜனங்கள் நேசிக்கிறார்கள். நேசிக்கத்தக்கவர். அவர் தன்மையும், வாழ்க்கையும் நேசிக்கத்தக்கவைகள். தேவ ஜனங்கள் யாவரும் இவர்மூலமாய் தேவனிடத்தில் சேருகிறார்கள். இவர் மேலேயே இவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். அவரோடு ஐக்கியப்பட்டு அவருடன் ஒன்றாககக் காணப்படுகிறார்கள். அவரிலே பார்க்கும்போது தேவனுடைய பார்வையில் அருமையானவர்களும் நேசிக்கப்படத்தக்கவர்களுமாய் இருக்கிறார்கள்.

தேவன் தம் பிள்ளைகளை முற்றும் அழகுள்ளவர்களென்று சொல்லி, அவர்கில் கறையில்லை என்கிறார். அன்பரே! நம்மில் நாமே குறைவுள்ளவர்கள், மகா பரிசுத்தருக்கு வெறுப்புண்டாக்குகிறார்கள். ஆனால், கிறிஸ்துவிலே நாம் பரிசுத்தர், நீதிமான்கள், சவுந்தரியவான்கள். அவர் நீதியால் நாம் உடுத்தப்பட்டிருப்பதால் தேவன் நம்மை நீதிமான்களென்கிறார். அவருடைய ஆவியால் நாம் நிரப்பப்படும்போது தேவன் நம்மை நேசிக்கத்தக்கவர்கள் என்கிறார். இயேசுவின்மூலமன்றி வேறு வழியே சென்றால் தேவன் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார். பிரியமானவர்மூலம் நம்மை அங்கீகரித்துக்கொள்வதினால், தம்முடைய கிருபையை யாவரும் கண்டு பிரமிப்பு அடையும்படி அதை மகிமைப்படுத்துகிறார். விசுவாசிகளாக தேவன் அங்கீகரித்துக் கொள்கிறார். இதைவிட அதிகமாய் அவர் நம்மை அங்கீகரித்துக் கொள்கிறார். இதைவிட அதிகமாய் அவர் நம்மை அங்கீகரிக்கப் போவதில்லை. நாம் அங்கீகரிக்கப்பட்டோம் என்பதை அதிக திட்டதாய் அறிந்து அதை அதிக சந்தோ}மாய் அனுபவிக்கலாம். ஆனால் இப்பொழுது இருக்கிறதிலும் அதிகமாய் நாம் அங்கீகரிக்கப்படவும் மாட்டோம்.

இயேசுவுக்கு நன்றியாக
அவர் ஒளியில் நடப்பேன்
முழுவதும் சுத்தனாகுமட்டும்
அவரையே பின்பற்றுவேன்.