மார்ச் 27
“நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.”
யாக் 4:3
கொடுப்பதில் தேவன் மமற்றவரா? அவர் சொல் தவறி போகுமா? இல்லை போகாது. ஆனால் பாவத்திற்கு இடங்கொடுக்கவோ, மதியீனத்திற்கு சம்மதிக்கவோ அவர் சொல்லுவில்லை. நமது ஜெபங்களுக்கு எல்லாம் பதில் கொடுக்க முடியும. ஆனால் நாம் ஜெபிக்கும்போது நம்முடைய நோக்கம் இன்னதென்று தேவன் கவனிக்கிறார். நமது விண்ணப்பங்களுக்கு செவிகொடுக்கும்போது நம்முடைய மனதை அறிந்துக்கொள்கிறார். நம் ஆசைகளை நிறைவேற்று நம் இச்சைகளைத் திருப்பதிப்புடுத்த உலக காரியங்களை நாம் கேட்போமானால் அவைகளையுமு; தேவன் கொடுப்பாரென்று நாம் எண்ணக்கூடாது. மாம்சத்திற்குரிய நோக்கத்தை முடிக்க ஆவிக்கரிய நன்மைகளைக் கேட்கும்போது தேவன் அவைகளையும் மறுக்கிறது நியாயந்தான்.
ஒருவேளை நாம் கேட்கிறது நல்ல காரியங்களாய் இருக்கலாம். ஆனால் நம்முடைய நோக்கம் தேவனை மகிமைப்படுத்தி, இயேசுவை உயர்த்தி, அவருடைய காரியத்தை நிறைவேற்றுவதாய் இருக்க வேண்டும். இந்த நோக்கம் நமக்கிராவிட்டால் நாம் தகாவிதமாய் கேட்கிறவர்களாய் இருப்போம். உலக காரியங்களைப்பற்றி அதிக வாஞ்சைக்கொண்டு பரம காரியங்களைப்பற்றி அதிக கவலையற்றிருக்கலாம். கெட்ட இச்சைகளாகிய பெருமை, பொருளாசை, பொறாமை இவைகளும் நம்மை ஜெபத்தில்ஏவலாம். ஆகவே நமது ஜெபத்திற்கு பதில் கிடையாத காரணம் என்ன என்பதை யோசிக்க வேண்டும். நமது சுயசித்தம், நம் சிந்தை, நமது நோக்கம் போன்றவை தகாததாய் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். நாம் ஏன், எப்படி, எதற்காக ஜெபம்பண்ணுகிறோம் என்று நம்மை நாம் ஆராய வேண்டும்.
ஜெபத்தில் என் நோக்கம்
தப்பாய் இருப்பதால்
என் உள்ளம் சுத்திகரியும்
உம்மிடம் என்னை இழும்.