திடன் கொள் மகனே என்றவர்
தினம் வந்து திருத்தியே நடத்துவார்
பலங்கொள்ள அவர் என்னை
பரிசுத்தஆவியால் பரிவுடன் நிரப்புவார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
உலகத்தில் உனக்கே உபத்திரவம் உண்டு
மகனே கலங்காதே
உலகத்தில் உனக்கே உபத்திரவம் உண்டு
மகனே கலங்காதே
உனக்காய் ஜீவனைத் தருவேன்
எந்தன் வாக்கை நீ மறவாதே
உனக்காய் ஜீவனைத் தருவேன்
எந்தன் வாக்கை நீ மறவாதே
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
ஆபத்து வேளையில் கூப்பிடும்
போதெந்தன் அருகினில் வருகிறார்
ஆபத்து வேளையில் கூப்பிடும்
போதெந்தன் அருகினில் வருகிறார்
ஆண்டவா என்று அழைத்திடும் போதவர்
அன்போடு கைநீட்டுவார்
ஆண்டவா என்று அழைத்திடும் போதவர்
அன்போடு கைநீட்டுவார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்








