Home பாடல்கள் சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை
இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ
மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை
இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ
உமதண்டையே எமக்குப் பரலோகமே
உமதண்டையே எமக்குப் பரலோகமே
அதைத் தரவேண்டியே இன்று துதி பாடினோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே
உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே
பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே
உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே
தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம்
தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம்
ஜெகஜோதியே எங்கள் குறை தீருமே

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

மனம் மாறியே தினமும் மன்றாடினோம்
உமது மலரடியிலே இன்று சரணாகினோம்
மனம் மாறியே தினமும் மன்றாடினோம்
உமது மலரடியிலே இன்று சரணாகினோம்
அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே
அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே
மன இருள் நீக்கியே ஞான ஒளி தாருமே

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா