மே 25
‘நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” கலா. 3:28
கிறிஸ்தவர்கள் எல்லாரும் கிறிஸ்துவில் ஒன்றாய் இருக்கிறார்கள். தேவ பிள்ளைகளின் ஐக்கியத்திற்கு அவர்தான் மையம். நாம் எல்லாரும் அவரில் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். அவர் ஒருவரே நம் எல்லாருக்கும் தெய்வம். அவரோடு ஐக்கியப்பட்டு ஜீவனுள்ளவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டோம். இனம்¸ வயது¸ அந்தஸ்து என்ற வேறுபாடுகளே இல்லை. எல்லாரும் வரப்போகிற அதே சிலாக்கியங்களை¸ இன்பங்களை¸ நன்மைகளைச் சுதந்தரிக்கப் போவதால் கிறிஸ்துவில் ஒன்றால் இருக்கிறோம். வயதிலே வித்தியாசம் இருந்தாலும் ஒரே குடும்பம்தான். பலவைத் தொழுவங்களிருந்தாலும் மந்தை ஒன்றுதான். வௌ;வேறு கற்களாக இருந்தாலும் கட்டப்படும் கட்டடம் ஒன்றுதான். பலவித ஆலயங்களும் அலுவல்களும் இருந்தாலும் ஒரெ சரீரம்தான். பல இடங்களில் சிதறிக்கிடந்தாலும் சபை ஒன்றுதான். இயேசு தம் சொந்த இரத்தத்தால் சம்பாதித்த ஒரே மணவாட்டிதான்.
ஆகவே நாம் எல்லாரும் கிறிஸ்துவுகள் ஒன்றாய் இருக்கிறது உண்மையானால்¸ சகோதரரைப்போல் ஒருவரை ஒருவர் நேசித்து சில வேளைகளிலாவது ஒன்று கூடி உணவருந்தி¸ உத்தம அன்பால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். சரீரத்தின் அவயவங்களைப்போல் ஒன்றுபட்டிருப்போம். எவ்விதத்திலும் வித்தியாசமி;ன்றி அனைத்திலுமே ஏக சிந்தையாய் இருக்க வேண்டும். இட வித்தியாசமானாலும்¸ காரிய போதனைகளினாலும் வேறு பட்டிருந்தாலும் கிறிஸ்துவுகள் அனைவரும் ஒன்றாய் இருக்க வேண்டும். நம்முடைய மேன்மையிலும்¸ நற்காரியங்களிலும் ஒருவரிலொருவர் சந்தோஷப்பட வேண்டும். அன்பர்களே¸ நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும்¸ கிறிஸ்துவிலிருக்கிறவனாக எண்ணி கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவமாகப் பாவித்து¸ அதற்கேற்றவாறு நடந்துகொள்ளுவோமாக.
கர்த்தாவே எங்கள் இதயத்தை
ஒன்றித்து வளர்ப்பியும்
உம்மைப்போல் இருப்போம்
அன்பில் வளருவோம்.