சிலுவையைச் சுமந்தது போதும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
மனந்திரும்பிடுவேன் இனி நானும்
உமது மலரடிக்கே திரும்ப வேணும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
வருத்தப்பட்டு நாம் பாரம் சுமப்பதை
சகிக்காத மனம் உமக்கு
சிலுவையில் தொங்கிடும் உம்மை கண்டுமே
மனம் திருந்தாத குணம் எமக்கு
வாக்குத்தத்தம் தந்த தேவா
உமது வார்த்தைக்கு கீழ்ப்படிவேன்
சாத்தானின் சோதனைக்கு நீக்கியே
எம்மையும் உம் பிள்ளைகளாய் எண்ணியே மீளும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
மனந்திரும்பிடுவேன் இனி நானும்
உமது மலரடிக்கே திரும்ப வேணும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
எம் கேடான குணத்தையே கண்டு நீர்
பாடுகள் பட்டது போதும்
வாடாத மலரான உமதுள்ளத்தை
தேடாத பாவியெம்மைக் காரும்
முறை கேடான பாவியென உணர்ந்தோம்
எம் தேவா நம் குறைதன்னைக் கேளும்
யாரோடு நாம் சேர்ந்துகொள்வோம்
எங்கள் ஐயனே ஆறுதலைத் தாரும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
மனந்திரும்பிடுவேன் இனி நானும்
உமது மலரடிக்கே திரும்ப வேணும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்













