Home Blog Page 2

ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது

ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது 
அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னது
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது

முத்தி முதல் கொடிக்கு மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்ததென்றே அர்த்தம் சொன்னது
அந்த ஆண்டவரின் சத்தியத்தை வேதம் சொன்னது
அவர் ஜீவ பலியானதையும் வெளிப்படுத்தியது

ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது 
அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னது
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது

மூலை இருந்தாரை முற்றத்தில் விட்டிடவே
சாலப் பெரிய எங்கள் சாமி வருவார் என்றும்
தண்டத்தைத் தான் ஏற்று தரணியைக் காத்திடவே
மன்னன் வருவார் எனவும் வேதம் சொன்னது

ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது 
அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னது
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது

நீற்றைப் புனைந்துமென்ன நீராடப் போயிமென்ன
ஆற்றைக் கடக்கும் வழி அறிந்து கொண்டாயா
மாற்றிப் பிறக்க வழி தெரியா உனைக் காத்து
சேற்றிலும் சிறை மீட்க தெய்வம் வந்தது

ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது 
அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னது
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது

அளவிட முடியா அன்பாலே

அளவிட முடியா அன்பாலே
ஆண்டவரே எம்மை அழைத்தீரே
இகமதில் பாவங்கள் பறந்தோட
இயேசுவாய் மண்ணில் பிறந்தீரே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

பிறவியில் நாமும் பாவியன்றோ எம்
பிழைதனை நீரும் பொறுப்பீரே
பிறவியில் நாமும் பாவியன்றோ எம்
பிழைதனை நீரும் பொறுப்பீரே

பாவமில்லாத ஒரு உடல் எடுத்து எங்கள்
பாலகன் இயேசுவாய் வந்தவரே
பாவமில்லாத ஒரு உடல் எடுத்து எங்கள்
பாலகன் இயேசுவாய் வந்தவரே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

நீதியின் தேவன் நீரன்றோ வழி
மாறிடும் நமக்கிங்கு ஆயனன்றோ
நீதியின் தேவன் நீரன்றோ வழி
மாறிடும் நமக்கிங்கு ஆயனன்றோ
தூயவரே உம் கருணையினை நாம்
துதிக்கின்ற வரம்தனைத் தந்துவிடும்
தூயவரே உம் கருணையினை நாம்
துதிக்கின்ற வரம்தனைத் தந்துவிடும்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

எமக்காய் மரித்த தேவனல்லோ  நீர்
நமக்காய் உயிர்த்த தெய்வமல்லோ
எமக்காய் மரித்த தேவனல்லோ  நீர்
நமக்காய் உயிர்த்த தெய்வமல்லோ
பிறர்க்காய் வாழ்ந்திடு என்றவரே நல்ல
பேரின்பப் போதனை தந்தவரே
பிறர்க்காய் வாழ்ந்திடு என்றவரே நல்ல
பேரின்பப் போதனை தந்தவரே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே

தெய்வம் மீண்டும் திரும்பி வரும்

தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
வல்லமை கொண்டவர் வருகையிலே
இங்கு நன்மைகள் நடப்பது சத்தியமே

நால் வகை வேதமும் பொருள் கூறும்
இயேசு நாதனின் மகிமையே அதில் சேரும்
வானமும் பூமியும் உறங்கி விடும் தேவன்
வார்த்தையே ஜீவனாய் இறங்கி வரும்

தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்

தேடிய செல்வங்கள் அழிந்து விடும்
தேவனை நாடிய உள்ளங்கள் உயிர்;த்து விடும்

இயேசுவின் வருகையில் இவை நடக்கும்
வேதம் சொல்லிய வார்த்தைகள் பலித்து விடும்

தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்

நிட்சயம் கர்த்தரின் வருகை வரும்
உன் நித்திய வாழ்வுக்கு பதிலும் தரும்
பத்துக் கற்பனை வழிகளில் கருணை வரும்
நம் அப்பனின் சத்தியம் நிலைத்து விடும்

தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
தெய்வம் மீண்டும் திரும்பி வரும்
நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்
வல்லமை கொண்டவர் வருகையிலே
இங்கு நன்மைகள் நடப்பது சத்தியமே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

தினமவர் வேதத்தைப் படித்தும் உன் சிந்தையில்
தெளிவின்னும் வரவில்லையோ மகனே
பணம் பட்டம் பதவி மோகம் உனைவிட்டு
நீங்கி விடும் காலமும் வரவில்லையோ மகனே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

சினம் விட்டு நீயும் உன் சீரான வாழ்வுக்கு
வழிவகுக்க எண்ணமில்லையோ
உனை மீட்ட இரட்சகரின் உன்னத சத்தியத்தை
ஏற்றிட மனமில்லையோ மகனே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

உன் பாவச் சிறைமீட்க உலகினில் இரட்சகனாய்
நம் இயேசு வரவில்லையோ
பெண் பாவச் சொல் கேட்டு ஆண் பாவம் தின்ற பழம்
நம் பாவம் தொடரவில்லையோ மகனே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

உன் மனச் சாட்சியினை இன்னும் ஏன் ஏமாற்றி
வாழ்கிறாய் புரியவில்லையோ
ஞானம் எனக்கில்லையென்று நாளை நாளையென்று
காலத்தைக் கடத்துவதேன் மகனே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

 நிலையற்ற இவ்வாழ்வை நிலையென்று நம்பியே நீ
வேதத்தை படிப்பது ஏன்
கடுகளவு விசுவாசம் இல்லையெனில் உன் மனதில்
கர்த்தரின் அன்பு இல்லையே மகனே

மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ
உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ

விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்

விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
இயேசுவின் பிள்ளைகள் ஆகியே
என்றும் அசையாத அஸ்திபாரத்தில்
விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்

மணலோரம் கட்டுகின்ற வீடுகள்
வெள்ளம் வரும்போது சாய்ந்து போக நேருமே
மணலோரம் கட்டுகின்ற வீடுகள்
வெள்ளம் வரும்போது சாய்ந்து போக நேருமே
கன்மலை மீது கட்டுகின்ற வீடுகள்
காற்றடித்தாலும் அசையாது நிற்குமே
கன்மலை மீது கட்டுகின்ற வீடுகள்
காற்றடித்தாலும் அசையாது நிற்குமே

விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
புத்தியுள்ள மனிதர் கட்டும் வீடுகள்
கன்மலைமீது கட்டும் வீடு ஆகுமே
புத்தியுள்ள மனிதர் கட்டும் வீடுகள்
கன்மலைமீது கட்டும் வீடு ஆகுமே
மதியில்லா மனிதர் கட்டும் வீடுகள்
மணலோரம் கட்டும் வீடு ஆகுமே
மதியில்லா மனிதர் கட்டும் வீடுகள்
மணலோரம் கட்டும் வீடு ஆகுமே

விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்
கன் மலைமீது கட்டும் வீடு ஆகுமே
இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்
கன் மலைமீது கட்டும் வீடு ஆகுமே
தேவ ஞானம் தேசம் எங்கும் பெருகவே
இயேசு சொன்ன வார்த்தைகளே போதுமே
தேவ ஞானம் தேசம் எங்கும் பெருகவே
இயேசு சொன்ன வார்த்தைகளே போதுமே

விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்
இயேசுவின் பிள்ளைகள் ஆகியே
என்றும் அசையாத அஸ்திபாரத்தில்
விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்
விசுவாச வீடு கட்டுவோம்

ஏறெடுத்து என் முகத்தை

ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்
என் இயேசுவே வாரும்….
சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்
என் நாதனே வாரும்…….
ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்
என் இயேசுவே வாரும்
சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்
என் நாதனே வாரும்
என் பாடலைக் கேளும்

பாவ பலியாகி நீர் கல்வாரி மலையேறி
பட்ட துயர் பார் அறியுமே
பாவ பலியாகி நீர் கல்வாரி மலையேறி
பட்ட துயர் பார் அறியுமே
வார் அடிக்கு உமதுடலில் வழிந்தோடும் இரத்தமது
பாவியெம்மை இரட்சிக்குமே
தேவா பாவியெம்மை இரட்சிக்குமே

ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்
என் இயேசுவே வாரும்
சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்
என் நாதனே வாரும்
என் பாடலைக் கேளும்

அன்பு கூர்ந்து எம்மை ஆதரிக்க வந்த தேவ
ஆட்டுக்குட்டியும் நீரே
அன்பு கூர்ந்து எம்மை ஆதரிக்க வந்த தேவ
ஆட்டுக்குட்டியும் நீரே
நம்பி வந்தோம் உமது மந்தையினில் எம்மையும்
சேர்த்துவிடும் மேய்ப்பரே
இயேசுவே சேர்த்துவிடும் மேய்ப்பரே

ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்
என் இயேசுவே வாரும்
சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்
என் நாதனே வாரும்
என் பாடலைக் கேளும்

வேறு ஒன்றும் கேட்கவில்லை நாதா
உம்மை மறவாத நெஞ்சம் ஒன்று வேண்டும்
வேறு ஒன்றும் கேட்கவில்லை நாதா
உம்மை மறவாத நெஞ்சம் ஒன்று வேண்டும்
இறவாத உமதன்பு நாமம் என்னை விட்டு
அகலாத வரம் தர வேண்டும்
தேவா அகலாத வரம் தர வேண்டும்

ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்
என் இயேசுவே வாரும்
சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்
என் நாதனே வாரும்
என் பாடலைக் கேளும்
என் நாதனே வாரும்

ஆண்டவர் இயேசு வருகின்றார்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்
ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

பாவத்தின் இருளைப் போக்கியவர்
பாரச் சிலுவையைத் தோளில் தூக்கியவர்
பாவத்தின் இருளைப் போக்கியவர்
பாரச் சிலுவையைத் தோளில் தூக்கியவர்
பன்னிரு சீடரைக் காட்டியவர்
பரம தந்தையின் பாதையைக் காட்டியவர்
பன்னிரு சீடரைக் காட்டியவர்
பரம தந்தையின் பாதையைக் காட்டியவர்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

மறுபடி வருவேன் என்ற தெய்வம்
எங்கள் மனுக்குலம் காக்கவே வந்த தெய்வம்
மறுபடி வருவேன் என்ற தெய்வம்
எங்கள் மனுக்குலம் காக்கவே வந்த தெய்வம்
தனக்கென்ற வழியைக் காட்டியவர்
இந்த தாரணி வணங்கிடும் தெய்வமவர்
தனக்கென்ற வழியைக் காட்டியவர்
இந்த தாரணி வணங்கிடும் தெய்வமவர்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

வேதத்தின் வார்த்தையில் பொருளானார்
நல்ல வாக்குத் தத்தங்களைத் தரலானார்
வேதத்தின் வார்த்தையில் பொருளானார்
நல்ல வாக்குத் தத்தங்களைத் தரலானார்
பாக்கியம் பெற்றிட இவர் நாமம்
என்றும் நோக்கியே ஸ்தோத்திர துதி செய்வோம்
பாக்கியம் பெற்றிட இவர் நாமம்
என்றும் நோக்கியே ஸ்தோத்திர துதி செய்வோம்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்
ஆண்டவர்  இயேசு வருகின்றார்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

பதறும் உன் உடலுக்குள் பரிசுத்த ஆவியாய்
பவனியும் வருகின்றார்
பதறும் உன் உடலுக்குள் பரிசுத்த ஆவியாய்
பவனியும் வருகின்றார்
கதறி எம் கன்னத்தில் கண்ணீரும் வரும்வேளை
கையினால் துடைக்கின்றார்
இயேசு கையினால் துடைக்கின்றார்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

அடைக்கலம் கொடுக்கின்ற ஆண்டவர் இயேசு
உன் அண்டையில் வருகின்றார்
அடைக்கலம் கொடுக்கின்ற ஆண்டவர் இயேசு
உன் அண்டையில் வருகின்றார்
படைத்திட்ட போதும் உன் பாவத்தை நாளும்
தன் சிலுவையில் சுமக்கின்றார்
இயேசு சிலுவையில் சுமக்கின்றார்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

உன்னிலும் என்னிலும் வாழ்கின்ற நேசரை
என் நாளும் வெறுக்காதே
உன்னிலும் என்னிலும் வாழ்கின்ற நேசரை
என் நாளும் வெறுக்காதே
என்னிடம் வாவென்று இருகையை நீட்டும்
என் தேவனை மறக்காதே
என் இயேசுவை மறக்காதே

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

இதயத் தூய்மையோடு எங்கள் இயேசுவை

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு
மனதில் நீங்கும் துன்பம்
துயர் நீங்க வந்த தங்கம்
இயேசு யூத ராஜ சிங்கம்
இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

வானத்திலும் பூமியிலும் மகிமையுள்ள தேவன்
இயேசு வார்த்தையோடு மாமிசமாய் வந்த நல்ல யூதன்
வாக்குகளைத் தந்து நம்மை காக்கும் நல்ல நாதன்
தம்மில் வாஞ்சையுள்ள அடியவராய் மனந்திருப்பும் நேசன்

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

புதியதொரு வாழ்வைத் தர இயேசுவிடம் கேளு
இந்த மனித வாழ்வின் நடைமுறைக்கு வழிவகுத்தவர் யாரு
தினமுமவர் நாமத்தினால் தரிசனங்கள் கூறு
இயேசு மனந்திரும்பு என்று மட்டும் சொல்லுகிறார் பாரு

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

அன்பு கூர்ந்து மனுக்குலத்தை மீட்க வந்த நாதன்
இயேசு ஆவியிலே தரிசனமாய் உயிர்த்தெழுந்த ஜீவன்
ஆண்டவராய் அவனியிலே வந்துதித்த பாலன்
இயேசு மீண்டுமொரு தலைமுறைக்கு வரவிருக்கும் தேவன்

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

அப்பழம் உண்ணாதே என்று சொல்லி
ஆண்டவர் கட்டளை ஒன்றைக் கொடுத்திருந்தும் ஆ… ஆ….
கட்டளை மீறிய காரணத்தால்
எம்மைத் தொட்டது தொடர்ந்தொரு பாவங்களே ஆ… ஆ….
பாவத்தின் சம்பளம் மரணம் என்றார்
கர்த்தர் பாவியை இரட்சிக்க விரைந்து வந்தார்
பாடுகள் வேதனைத் துயர் அடைந்தார்
இயேசு பாவத்தைச் சிலுவையாய் சுமந்து வந்தார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

இத்தனை கொடுமைக்கும் ஆளாகி
இயேசு இரக்கத்தின் தேவனாய் உயிர்த்தெழுந்தார் ஆ… ஆ….
மனுக்குலம் காத்திட மறுபடியும்
தாம் வருவதாய் கூறியே இறையானார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

Popular Posts

My Favorites

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை

மார்ச் 04 "இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை." 1.சாமு. 15:29 கர்த்தர் பொய் சொல்லாதவரானபடியால் நாம் அவருக்கு உண்மையாக இருந்து அவரை நம்பவேண்டும். இது நமது கடமை. அவருக்கு முன்னால் பொய்யற்றவர்களாக நிற்க வேண்டும். அவருடைய...