முகப்பு தினதியானம் நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்

நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்

மார்ச் 30

“நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்.” ஆதி. 42:18

இந்த வார்த்தைகளை யோசேப்பு, தன் சகோதரரைப் பார்த்துச் சொன்னான். தன் தகப்பனுக்குப் போஜன பதார்த்தங்களை அனுப்பும்போது இப்படிச் சொன்னான்;. கிpறஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமாக நடக்க நாம் சோதிக்கப்பட்டால் நாம் இப்படி சொல்லலாம். உத்தமமான தேவபயம் அன்பினால் பிறந்து பிள்ளையைப்போல தேவனோடு உறவாடுவதனால் உறுதிப்படுகிறது. இந்தப் பயம் அவருடைய மகத்துவத்தைப் பார்த்துப் பயப்படும் பயம் அல்ல. அவருக்கு வருத்தம் உண்டாக்க கூடாதே என்கிற பயம்தான். இந்தப் பயத்திற்கு காரணம் பரிசுத்த ஆவியானவர்.. பாவம் செய்யாதிருக்க இவர் நல்ல மாற்று. தேவனுக்கு மனஸ்தாபம் உண்டாக்கப் பயந்தால் எவ்விதமும் அவரைப் பிரியப்படுத்த பார்ப்போம். உண்மையாக நான் அவரை நேசித்தால் அவருக்கு மனஸ்தாபம் உண்டாக்க பயப்படுவேன். இந்தப் பயம் நம்மை எச்சரிப்புள்ளவர்களாகவும், விழிப்புள்ளவர்களாகவும் இருக்கப்பண்ணும். இது நம்மை ஜெபத்திற்கு நடத்தும். தற்பரிசோதனை செய்ய ஏவி விடும். நமது நடக்கையை வசனத்தோடு ஒத்துப் பார்க்கப்பண்ணும். இது நம்மை ஜெபத்திற்கு நடத்தும். தற்பரிசோதனை செய்ய ஏவி விடும். நமது நடக்கையை வசனத்தோடு ஒத்துப் பார்க்கப்பண்ணும். துணிகரத்திற்கும் அசட்டைக்கும் உண்மை தாழ்ச்சிக்கும் நம்மை விலக்கிக் காக்கும்.

தேவனுக்குப் பயப்படுகிறவன் பாவிகள் வழியில் நடக்கமாட்டான். துன்மார்க்கர் ஆலோசனையில் நிற்கமாட்டான். பரியாசக்காரருடைய இடத்தில் உட்காரமாட்டான். அவன் பிரியம் தேவ வசனத்தில் இருக்கும். அதை இரவும் பகலும் தியானிப்பான். இன்று தெய்வ பயம் நம்மை நமத்தினதுண்டா? நான் தேவனுக்குப் பயப்படுகிறேன் என்று நீங்கள் சொன்னதுண்டா? அப்படியில்லை என்றால் நாம் கர்த்தருக்குப் பயப்படவில்லை என்றே சொல்லமுடியும். உன்னால் நான் கர்த்தருக்குப் பயப்படுகிறவன் என்று சொல்லக்கூடுமா?

தேவ பயம் சுகம் தரும்
வெளிச்சம் இன்பம் அளிக்கும்
தெய்வ செயலை விளக்கும்
இரக்கத்தைப் பெரிதாக்கும்.