முகப்பு தினதியானம் சமாதானத்தின் தேவன்

சமாதானத்தின் தேவன்

பெப்ரவரி 05

“சமாதானத்தின் தேவன்.”  எபி. 13:20

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் தேவன் நம்மோடு முற்றிலும் சமாதானமாகி ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறார். அவர் சமாதானத்தின் தேவன். பயப்படத்தக்கதொன்றும் அவரில் இல்லை. இயேசுவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதை நடக்குக் கொடுப்பார். அவர் நம்மேல் மனஸ்தாபமாயிருந்தது உண்மைதான். இப்போதோ அவர் கோபம் நீங்கி ஆறுதல்படுத்துகிறார். நமக்கும், அவருக்கும் இப்போது சமாதானமுண்டு. நமது நன்மையை அவர் போருகிறார். அவருக்கு மகிமையை அதிகம் கொடுக்க வேண்டியதே நமது கடமை. யோகோவா நம்மிடம் சமாதானமாய் இருப்பது எத்தனை பாக்கியம். அவரின் சமுகத்தில் நமது இருதயத்தை ஊற்றி அவரில் நம்பிக்கை வைத்து முழுவதும் அவர் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

கிறிஸ்துவானவர் நமக்காக நிறைவேற்றின கிரியையை, யோகோவா அங்கீகரித்து, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, பரம ஸ்தலங்களில் அவரைத் தமது வலது பாரிசத்தில் வைத்து, அவர்மூலம் நமது வாழ்க்கைக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இப்போதும் அவர் அதிகமாய் நம்மோடு சமாதானப்பட்டிருக்குpறார். நாம் இதை அதிகமாய் நம்பி அதிகமாய் அனுபவிக்கலாம். பரிசுத்தாவியைத் தந்து நமக்கு நன்மை செய்கிறது அவருக்குப் பிரியம். இனி தேவனைக் குறித்து தப்பெண்ணங்கொள்ளாதபடிக்கும் அவர் கடினமனமு;ளவரென்று எண்ணாதபடிக்கும் எச்சரிக்கையாயிருப்போமாக. அவர் சமாதானத்தின் தேவன்.

சமாதானத்தின் தேவனே
அமர்ந்த மனநிலை தாருமே
இருதயத்தில் இரத்தம் தெளித்து
உமது நாமம் அதில் எழுதுமே.