கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்
அல்லும் பகலுமே அலைந்து திரிந்து நான்
ஆலயம் போகையிலே – அந்த
அன்புத் தெய்வம் எந்தன் ….
தோளில் சுமந்து வந்தார்
அவர்தம் தோளினிலே சுமந்து வந்தார்
கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்
செல்லும் பாதை எது எனக்கு இனி என்று நான்
திரிந்திட்ட போதினிலே – ஒ
நில்லு மகனே என்று நேர்வழி காட்டிட
மேய்ப்பனாய் ஓடி வந்தார் – நல்ல
மேய்ப்பனாய் ஓடி வந்தார்
கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்
அன்பு கொண்டு உன்னை அணைக்கத் துடிக்கிறேன்
என்னை நீ மறவாதே என்று
ஆறுதல் கூறியே ஆண்டவர் இயேசு என்
அருகினில் ஓடி வந்தார்
கல்லும் மலையுமே கடந்து சென்றே நான்
கடவுளைத் தேடுகையில் – ஒரு
முள் முடி சுமந்தே முதுகில் சிலுவைகொண்டு
இயேசு என்னை அழைத்தார் – அன்பின்
இயேசு என்னை அழைத்தார்








