ஜனவரி19
“கிறிஸ்துவுக்குஉடன் சுதந்தரருமாமே.” ரோமர் 8:17
கிறிஸ்துவோடுஇப்போது சம்பந்தப்பட்டிருப்பதால் எப்போதும் அவரோடு சுகந்தரர் ஆவோம். ஒரேகுடும்பத்தைச் சார்ந்த சகோதரர்களாய் மட்டுமல்ல மணவாட்டி மணவாளனோடுசுதந்தரவாளியாவதுப்போல் சுதந்தரம் ஆவோம். இயேசுவானவரே சகலத்துக்கும்சுதந்தரவாளியாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். நாமும் அவரோடு ஜக்கியப்பட்டிருக்கிறோம்.ஆதலால் தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்குள் உடன் சுதந்தரருமாமே. என்னே மகத்துவம்!எவ்வளவு பெரிய சிலாக்கியம். நாம் இரட்சிப்புக்குச் சுதந்தரர்.வாக்குத்தத்தத்துக்கும் சுதந்தரர். ஆதாமோடு சம்பந்தப்பட்டு குற்றத்துக்கும்நாசத்துக்கும் நிர்ப்பாக்கியத்துக்கும் உள்ளானோம். ஆனால் இயேசுவோடுநம்பந்தப்பட்டதால் நீதியம், சமாதானமும், நித்திய ஆசீர்வாதமும் நமக்குகிடைக்கிறது. இப்போது அவரோடு துன்பப்படுவோமானால், இன்னும் கொஞ்சகாலத்தில் அவரோடு மகிமையடைவோம். இப்போது துக்க பாத்திரத்தில் குடிக்கிறோம்.வெகு சீக்கிரத்தில் மகிழ்ச்சியின் பாத்திரத்தில் பானம்பண்ணுவோம்.
கிறிஸ்துவோடுநாம் சுதந்திரராயிருக்கிறோமா? கிறிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசத்தில் தேவனுடையபிள்ளைகளாயிருக்கிறோமா? நமது பரமபிதாவை மனமார நேசிக்கிறோமா? அவருக்கே கனமும்மகிமையும் உண்டாக வேண்டுமென்ற ஒரு பெரிய வைராக்கியம் நமக்கிருக்கிறதா? அவரின்பிரசன்னத்தின் சந்தோஷத்தை விரும்புகிறோமா? நேசரில்லாமல் வாழ்ந்தால்துக்கமும் துயரமும் நாம் அடைகிறோமா? தேவபிள்ளைகளோடு நல்ல ஐக்கியம் உண்டா? பாவத்தைப் பகைத்து பரிசுத்தம் வாஞ்சித்துஆனந்தம் கொள்ளுகிறோமா? அப்படியானால் கிறிஸ்துவானவர் நம்மைத் தம்முடையசகோதரர் என்கிறார். தேவன் நம்மைத் தம்முடைய பிள்ளைகள் என்கிறார். நாம்முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரருமாகும்படி தெரிந்துக்கொள்ளப்பட்டோம்.
தேவனுடையபுத்திரன்
சுதந்தரம்மகா பெரியது
தேவபிள்ளைகளுக்கு வரும் மகிமை
மகாபெரிய மகா இனிது.