மனம் கசிந்தேயொரு ஜெபம்
மனம் கசிந்தேயொரு ஜெபம் செய்யும்போது – தன்
ஆவியினால் கர்த்தர் உனை நிரப்புவாரு
மனம் கசிந்தேயொரு ஜெபம் செய்யும்போது – தன்
ஆவியினால் கர்த்தர் உனை நிரப்புவாரு
மனம் திரும்பியே நீயும் மன்றாடியே கேளு – உன்
மனக்குறை யாவுமே தீர்த்து வைப்பாரு
மனம் திரும்பியே நீயும் மன்றாடியே கேளு – உன்
மனக்குறை யாவுமே தீர்த்து வைப்பாரு
இனம் தெரியாத நோய் எது வந்தபோதும் – அதை
குணமாக்கும் என்று கர்த்தரையே கேளு
இனம் தெரியாத நோய் எது வந்தபோதும் – அதை
குணமாக்கும் என்று கர்த்தரையே கேளு
உடன் தருவார் சுகம் இயேசுவே எனப் பாடு
உண்மை அன்பை நீயும் சிலுவையிலே பாரு
உடன் தருவார் சுகம் இயேசுவே எனப் பாடு
உண்மை அன்பை நீயும் சிலுவையிலே பாரு
பணம் பொருள் பதவி உந்தன் கூடவராது – பாவச்
சுமையினில் எமை மீட்க வந்தது யாரு
பணம் பொருள் பதவி உந்தன் கூடவராது – பாவச்
சுமையினில் எமை மீட்க வந்தது யாரு
கன்மலையே என்னைக் காத்திடும் எனப்பாடு
கண்ணீரோடொரு ஜெபம் செய்து கேளு
கன்மலையே என்னைக் காத்திடும் எனப்பாடு
கண்ணீரோடொரு ஜெபம் செய்து கேளு
நொருங்குண்ட இதயத்தின் குறைகள் கேட்பாரு – ஆவியில்
எளிமைகொண்டே அடைக்கலம் கேளு
நொருங்குண்ட இதயத்தின் குறைகள் கேட்பாரு – ஆவியில்
எளிமைகொண்டே அடைக்கலம் கேளு
கலங்கும் உன் மனதுக்கு களிப்பூட்டுவாரு – அந்த
இரக்கத்தின் தேவனை நீ ருசித்தே பாரு
கலங்கும் உன் மனதுக்கு களிப்பூட்டுவாரு – அந்த
இரக்கத்தின் தேவனை நீ ருசித்தே பாரு