முகப்பு தினதியானம் இரக்கங்களின் பிதா

இரக்கங்களின் பிதா

மார்ச் 26

“இரக்கங்களின் பிதா.” 2. கொரி. 1:3

யேகோவா நமக்குப் பிதா, இரக்கமுள்ள பிதா, உருக்கம் நிறைந்த பிதா. அவர் இரக்கங்களின் ஊற்றாயிருக்கிறபடியால், இரக்கங்களெல்லாம் அவரிடத்திலிருந்து தோன்றி அவரிடத்திலிருந்தே பாய்கிறது. நமக்குக் கிடைத்த விசேஷ இரக்கம் இரட்சகர்தான். அவர் தேவனின் ஒரே பேறான குமாரன். அவர் குமாரனை நம்மெல்லாருக்காகவும் இலவசமாய் ஒப்புக்கொடுத்தார். நம்மை உயிர்ப்பித்து, ஆறுதல்படுத்தி, இன்னும் நம்மைப் பாதுகாத்து வருகிற இரக்கத்திற்கு காரணர் அவரே. இரக்கமாய் நமக்கு வருகிற துன்பங்களும், விடுதலைகளும், இடைஞ்சல்களும், சகாயங்களும், நம்மைகளும் அவரின் சித்தத்தின்படிதான் நமக்கு வருகிறது.

அவரே இரக்கங்களின் பிதா, நமக்கு வரும் உருக்கமான இரக்கமெல்லாம் அவரிடத்திலிருந்தே பாய்கிறது. அவர் நம்மிடம் கோபிக்கிறவர் என்றும், அவர் கடினமானவர் என்றும் பல சமயங்களில் தப்பாய் நினைக்கிறதை இனி நீக்கி நமது விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் உற்சாகப்படுத்துகிறது. நாம் ஆராதிக்கிற தேவன் இரக்கம் நிறைந்தவர் என்று நம் ஆத்துமா அறிவதுதான் மிக முக்கியம். அப்போதுதான் சாத்தானின் அக்கினி அப்புகளைத் தடுக்க இது ஒரு நல்ல கேடகம். தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் சகல ஈவுகளிலும் அவரை அதிகமாய் நேசிக்க இது ஒரு நல்ல வழி.

அன்பர்களே, இன்றிரவு உங்களுக்கு என்ன தேவை? இரக்கமா? அது தேவனிடத்தில் உண்டு. அது உங்களுக்கு நன்மையென்றால் அதைத்தர மனதாயிருக்கிறார். இன்றிரவு ங்கள் பரம பிதாவை நோக்குp கெஞ்சுங்கள். அவர் உற்களுக்கு இரங்குவார். அது உங்களுக்கு தேவையாயிருக்கிறது. எந்த இரக்கமானாலும் அதை உங்கள் முன்பாகக் கொண்டு வந்து வைப்பார்.

ஆத்துமாவே, உன் நேகர்
எந்நாளும் மாறாதவர்
யார் போயினும் அவரில்
நிலைத்துப் பிழைத்து நில்.