ஏப்ரல் 06
“நீதிமான்களின் உயிர்த்தெழுதல்.” லூக்கா 14:14
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுந்திருப்பார்கள். அழியாமையுள்ளவர்களாய்ப் பலத்தோடும் ஆவிக்குரிய மகிமையோடும் எழுந்திருப்பார்கள். கிறிஸ்துவின் மகிமையான சரீரத்துக்கு ஒப்பான சரீரம் அவர்களுக்கு இருக்கும். அவருடைய சத்தம் அவர்களை உயிர்ப்பித்து, அவருடைய வல்லமை அவர்களை எழுப்பும். அவரின் மகிமை அவர்களைச் சூழ அலங்காரமாயிருக்கும். அவர்கள் அவரைப்போலவே இருப்பார்கள். காரணம் அவர் இருக்கிறவண்ணமாகவே அவரைப் பார்ப்பார்கள். அந்த உயிர்த்தெழுதலின் வேளை எவ்வளவு ஒரு மகிழ்ச்சியாய் இருக்கும்.
நாமும் அதோடு சம்மந்தப்பட்டவர்களாயிருந்தும் அதைப்பற்றி அதிகம் நினைக்கிறதில்லை. அந்த நேரத்தை ஆவலாய் எதிர்ப்பார்க்கிறதில்லை. ஒருவேளை தூக்கத்தில் நாம் மரித்து அடுத்த காலை உயிர்த்தெழுதலின் காலையாய் இருக்கலாம். அல்லது இருக்கிறோமா? நீதிமான்களுடைய உயிர்த்தெழுதல் மகிமை நிறைந்தவர்களாய்ப் புறப்பட்டு வருவார்கள். ‘இயேசுவோடு ஐக்கியப்பட்டு, அவர் மகிமையில் பங்கடைந்து, அவர் இருக்கும் இடத்தில் அவரோடுகூட தியானிக்க வேண்டும். தினந்தோறும் அதற்கு ஆயத்தமாக வேண்டும். அவர் சமீபித்திருக்கிறதாக அறிந்து நடக்க வேண்டும். உயிர்த்தெழுதல் அடையும்படி, பிரயாசப்பட்டு துன்பத்தை சகித்து ஜெபித்த பவுலைப்போல் நாமும் இருக்கவேண்டும். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குடையவன் பாக்கியவான்.
விண்மண்ணிலுள்ளோர் யாவரும்
மகா கர்த்தாவைப் போற்றுங்கள்
இயேசு இராஜன் தோன்றுவார்
இரட்சிப்பளிக்க வருவார்.