பாடல்கள்

Home பாடல்கள் Page 3

நல்ல நேரம் வந்து அழைத்தது

நல்ல நேரம் வந்து அழைத்தது
என்னைத் தேவனோடு இணைத்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது
என்னைத் தேவனோடு இணைத்தது
உள்ளம் தூய்மையோடு சிரித்தது
ஊமைக் கோபம் ஓடி மறைந்தது
உள்ளம் தூய்மையோடு சிரித்தது
ஊமைக் கோபம் ஓடி மறைந்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது….

தினம் இயேசு பாதம் நினைத்தது
மனம் மாறி நெஞ்சம் துதிக்குது
தினம் இயேசு பாதம் நினைத்தது
மனம் மாறி நெஞ்சம் துதிக்குது
நெஞ்சில் பாவம் ஓடி மறைந்தது
கர்த்தர் வார்த்தை நெஞ்சில் பதிந்தது
நெஞ்சில் பாவம் ஓடி மறைந்தது
கர்த்தர் வார்த்தை நெஞ்சில் பதிந்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது….

வார்த்தை தேவனாக இருந்தது
ஜீவ நாதமாக ஒலித்தது
வார்த்தை தேவனாக இருந்தது
ஜீவ நாதமாக ஒலித்தது
வானம் பூமி மாறிப் போனாலும்
தேவன் வார்த்தை என்றும் மாறாது
வானம் பூமி மாறிப் போனாலும்
தேவன் வார்த்தை என்றும் மாறாது
நல்ல நேரம் வந்து அழைத்தது….

அருள் வேதநூலைப் படித்திடு
இருள் நீங்கி ஞானம் அடைந்திடு
அருள் வேதநூலைப் படித்திடு
இருள் நீங்கி ஞானம் அடைந்திடு
கனிவோடு பேசும் மொழியிது
பணிவோடு தேடும் வழியிது
கனிவோடு பேசும் மொழியிது
பணிவோடு தேடும் வழியிது

நல்ல நேரம் வந்து அழைத்தது….
என்னைத் தேவனோடு இணைத்தது

Mulmudi Mudi Sumanthu – முள்மூடி முடி சுமந்து

முள்மூடி முடி சுமந்து
நீர் முதுகில் சிலுவைகொண்டு
கல்வாரி மலைமீது
நீர் தள்ளாடி நடந்தது ஏன்
பொல்லாத மானிடரை
நீர் இரட்சிக்க வந்தீரோ
பொல்லாத மானிடரை
நீர் இரட்சிக்க வந்தீரோ
கர்த்தாவே கதறுகின்றேன்
அந்தக் காட்சியை நினைக்கின்றேன்
கல்லான இதயங்களில்
கண்ணீர் வந்திடவில்லை ஐயா
இங்கு கல்லான இதயங்களில்
கண்ணீர் வந்திடவில்லை ஐயா

கண்கெட்ட குருடர்களும்
உமது கைதொட்டு சுத்தமாகினார்
குஷ்டம் வந்த ரோகிகளும்
உமது கைதொட்டு சுத்தமாகினார்
செத்தவரும் எழுந்திருந்து
தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே
அன்று செத்தவரும் எழுந்திருந்து
தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே

அத்தனையும் செய்த உம்மை
பின்பு சித்ரவதை செய்தது
ஏன் கர்த்தாவே கதறுகிறேன்
அந்தக் காட்சியை நினைக்கின்றேன்
கல்லடியும் கசையடியும்
வாய்ச் சொல்லடியும் ஏற்றது ஏன்
ஐயா உம் கண்ணான பிள்ளைகளுக்காய்
இவற்றைத் தாங்கித் தவித்தீரோ
இன்னும் நாம் உணரவில்லை
மண்ணில் நீதியும் நிலைக்கவில்லை

ஆயத்தமா (6)

  • Aayathamaa_6
❚❚

Tamil Christian Traditional Songs – Golden Hits Vol-1

  • Tamil-Christian-Traditional-Songs
❚❚

Popular Posts

My Favorites

என் ஆலோசனை நிற்கும்

பெப்ரவரி 20 "என் ஆலோசனை நிற்கும்." ஏசாயா 46:10 மனுஷன் செய்யும் யோசனை சரியற்றதும் புத்தியற்றதுமாய் காணலாம். அவனுக்கிருக்கும் அறிவு குறைவுள்ளது. மனதும் ஒழுங்கற்றது. ஆனால் கர்த்தரின் யோசனையோ, அளவற்ற ஞானமும் சர்வ வல்லமையுள்ளதாயிருக்கும். மனிதர்...