Home Blog Page 36

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

மே 24

“‘விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” கலா. 3:11

விசுவாசத்தினால்தான் அவர்கள் நீதிமான்களாகிறார்கள். பாவத்தைப்பற்றி உணர்வடைந்தவர்களானதால் தங்கள் பெலவீனத்தை உணர்ந்து¸ சுவிசேஷத்தை அறிந்து¸ கிறிஸ்துவின் கிரியைகளைப் பற்றி பிடித்து கொள்ளுகிறார்கள். அவரின் நீதி அவர்களுடையதானபடியால் எல்லா குற்றத்திற்கும் நீங்கலாகுகிறார்கள். நீதிமான்களாக்கப்பட்டு பிழைத்திருக்கிறார்கள். அதாவது ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டு¸ சகல ஞான நன்மைகளுக்கும் உரியவர்களாகி சுயாதீனராய் நடக்கிறார்கள். விசுவாசத்தினால் அவர்கள் பிழைக்கிறார்கள். விசுவாசத்தினால் தங்கள் சத்துருக்களை மேற்கொள்ளுகிறார்கள். விசுவாசத்தினால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். விசுவாசத்தினால் தேவனோடு சஞ்சரிக்கிறார்கள்.

தேவ குமாரன்மீதுள்ள விசுவாசத்தினாலேதான் அவர்கள் இவ்வுலகத்தில் ஜீவிக்கிறார்கள். அவர்கள் வேதத்தின் வார்த்தைகளைப் பற்றிப்பிடித்து அவருடைய கிரியையின்மேல் மட்டும் சாய்நது¸ அவர் சத்தியத்தின் பேரில் நம்பிக்கை வைத்து அவரின் நிறைவிலிருந்து தங்களுக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக்கொள்கிறார்கள். வருவாய்க்காக அல்ல¸ அன்பினால் ஊழியம் செய்கிறார்கள். கூலி வாங்கும் வேலைக்காரர்கள் போலல்லாமல் பிதாவின் வீட்டில் உள்ள பிள்ளைகளாய் வேலை செய்கிறார்கள். இவர்கள் தேவனை நம்பிப் பெற்றுக்கொள்ளாதபோதும் கொடுப்பாரென்று எதிர்ப்பார்த்து¸ வாக்களிக்கப்பட்டது தாமதிக்கும்போதும் அதற்காக காத்திருக்கிறார்கள். எல்லாம் இருளானாலும்¸ மனதுக்கு வருத்தமானாலும் இவர்கள் முன்னேறி செல்கிறார்கள். சில வேளைகளில் அவர்களுக்கு இருக்கிறதெல்லாம் அவருடைய வாக்குத்தத்தம்தான். எல்லாம் குளிர்ந்து விறைத்து செத்துப்போனதுபோல உள்ளே காணப்பட்டாலும் புறம்பே எல்லாம் அவர்களுக்கு மாறாகக் காணப்பட்டாலும்¸ அச்சூழ்நிலையிலும் அவர்கள் தேவனை நம்பி¸ தங்கள் ஆண்டவரை உறுதியாய்ப் பிடிக்கிறார்கள்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடுவார் எந்நாளும்.

கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.

மே 23

“கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.” 2.தீமோ.2:19

தகப்பனுக்கு தன் பிள்ளை தெரியும். அன்பு கணவன் தன் ஆசை மனைவியை அறிவான். அப்படியே கர்த்தர் தம்முடையவர்களை அறிவார். தம் நேசமான பொருளாக¸ தம் குமாரன் இரத்தத்தினால் வாங்கப்பட்டவர்களாகவும்¸ பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும் அவர்களை அறிவார். பூமியிலே அவர்கள் பரதேசிகளும் அந்நியருமானவர்கள். ஆகவே அவர்களை அறிவார். தம்முடைய பிள்ளைகளை தேவன் ஆராய்ந்து அறிந்திருக்கிறார். உலகத்தார்¸ அவர்கள் தலைமேல் ஏறும்படி அனுமதித்தாலும்¸ தீய்க்கும் தண்ணீருக்கும் அவர்களை உள்ளாக்கினாலும் அவர்களை அறிவார்.

தம்மை யாரெல்லாம் நேசிக்கிறார்கள் என்றும்¸ இன்னும் அதிகம் நேசிக்க முடியவில்லையே என்று ஏங்குகிறவர்களையும் அவர் அறிவார். விசுவாசத்தால் போராடி¸ விசுவாசம் பெலவீனமாய் இருக்கிறதே என்று மனவேதனைப்படுகிறவர்களையும் அவர் அறிவார். பயமும்¸ திகிலும் அலைக்கழித்து கொந்தளித்தாலும்¸ தம்மை அவர்கள் நம்பியிருக்கிறார்களே என்று அவர் அறிவார். தம்முடைய வழிகளுக்குக் கீழ்ப்படிந்து கற்பனைகளை எப்போதும் கைக்கொண்டால் நலம் என்று பெருமூச்சு விடுகிறவர்கள் என்று அவர்களை அறிவார்.

அன்பர்களே¸ கர்த்தர் உங்களைத் தம்முடையவர்கள் என்று அறிந்து¸ தமது சொந்தப் பிள்ளைகளென்று நேசித்து¸ தாம் தெரிந்துக் கொண்ட மணவாட்டியாக உங்களுக்காக கவலைப்பட்டு¸ தம் மந்தையின் ஆடுகளாக உங்களை மேய்த்து¸ கண்ணின் கருவிழிப்போல் புடமிட்டு நல் ஆபரணங்களாக உங்களைப் பத்திரப்படுத்தி தம்முடைய கிரீடத்தின் இரத்தின கற்களாக உங்களைப் பூரணமாய் அறிந்திருக்கிறார்.

தேவனே உமது பக்தரெல்லாம்
உமக்கே எவ்வளவு அருமை
உமது நாமம் தரிசித்தோர்
பெற்றுக் கொள்வார் மகிமை.

என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.

மே 22

“என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.” சங் 119:172

எல்லா கிறிஸ்தவர்களும் இப்படிச் செய்வார்களானால் உலகில் அறியாமை குறையும். தேவனுடைய வசனம் ஒன்றுதான் பெருமையாய்ப் பேச தகுதியுடையது. நாம் அதை வாசித்து¸ விசுவாசித்து¸ நேசித்து¸ அதன்படி செய்து அதை அனுபவித்து¸ மற்றவர்களுக்கும் சொல்லும்படித்தான் அது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது பாவிகளைச் சீர்ப்படுத்தும். ஆகவே அதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அது விசுவாசிகளை ஊன்றக் கட்டும். ஆகவே அதை அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அது பின் வாங்கிப் போனவர்களை செவ்வையான பாதைக்குத் திரும்பப்பண்ணும். ஆகவே அதை அவர்களுக்கு விளக்க வேண்டும். நம்முடைய ஆத்துமாக்களுக்கு அது ஆறுதலைக் கொடுக்கும். ஆகவே நாம் அதைத் தியானித்து மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும்.

அது தேவனை மகிமைப்படுத்தி இரட்சகரை உயர்த்தும். ஆகையால் நாம் தேவனை¸ நேசிக்கிறதினால் ஏவப்பட்டு அதை விளக்கிச் சொல்லவேண்டும். தகுந்த நேரத்தில் அன்போடும்¸ அறிவோடும்¸ நன்மை உண்டாக அதைச் சொல்ல வேண்டும். வசனம் விதைப்போன்றது. ஆத்திரக்காரனை பொறுமையுள்ளவனாக்கி¸ துக்கமுள்ளவனை ஆற்றி¸ அலைந்து திரிகிறவனை நல்வழிப்படுத்தி¸ மனம் வருந்துகிறவனுக்குச் சமாதானம் அளிக்கும். பசியுள்ளவனுக்கு அது போஜனம்¸ அறிவீனனுக்கு வெளிச்சம். பலவீனனுக்குக் கைத்தடி¸ யுத்த வீரனுக்கு பட்டயம்¸ களைத்துப் போனவனுக்கு மென்மையான தலையணை. ஆகவே கர்த்தருடைய ஒத்தாசையால் அவருடைய வசனத்தை விவரித்துச் சொல்ல தீர்மானிப்போமாக.

சத்தியத்தைப் போதியும்
உம்மைத் துதித்துப் போற்றுவேன்
சுவிசேஷ நற்செய்தியை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்.

Tamil Christian Traditional Songs – Golden Hits Vol-1

  • Tamil-Christian-Traditional-Songs
❚❚

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

ஏப்ரல் 30

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்”  மத். 5:5

சாந்தகுணம் மனப்பெலவீனமல்ல. பல சமயம் நாம் தவறாய் இரண்டையும் ஒன்றாக்கி விடுகிறோம். கல்மனமுள்ளவர்களிடமும் சாந்த குணம் இருக்கிறது. சாந்த குணம் உள்ளவர்கள் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் வார்த்தையை மதித்து நடுங்குகிறார்கள். இவர்கள் தேவன் சொல்லும் எல்லாவற்றையும் முறுமுறுக்காமல் காற்றுக்குச் செடி வளைகிறதுப்போல வணங்கி கர்த்தரின் சித்தம் ஆகக்கடவது என்பார்கள்.

சாந்த குணமுள்ளவர்கள் மௌனமாய்த் தேவ கட்டளைகளுக்கு அர்ப்பணித்து இயேசுவைப்போல் பொறுமையாய் நடந்து, பரிசுத்தாவியின் நடத்துதல்படி நடப்பார்கள். அவர்கள் தேவனிடம் தாழ்மையோடும், பிறரிடம் விவேகத்தோடு நடந்து தங்களுக்குப் புகழைத் தேடாமல் கர்த்தருக்கு மகிமையைத் தேடுவார்கள். இவர்கள் சாந்த குணமுள்ள ஆட்டுக்குட்டிகள். கெர்ச்சிக்கிற சிங்கங்கள் அல்ல. சாதுவான புறாக்கள். கொல்லுகிற கழுதுகளல்ல. ஆட்டைப்போல உபகாரிகள். ஓநாய்போல கொலையாளிகளல்ல. இவர்கள் கிறிஸ்துவைப்போல் நடந்து அவரைப்போல் பாக்கியராயிருப்பார்கள். இப்போது அவர்களுக்கு இருப்பது எல்லாம் கொஞ்சந்தான். ஆனால் பூமியைச் சீக்கிரத்தில் சுத்திகரித்துக் கொள்வார்கள். அவர்களுடைய மனநிலையே பெரிய பாக்கியம். ஒன்றுமற்றவர்களைக் கலங்கடிக்கும் பூசலுக்கு விலகி இருக்கிறார்கள். மற்றவர்கள் சேதப்படும்போது இவர்கள் தப்பி சுகமாய் காக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் கோபமாய் இருக்கும்போது இவர்கள் சாந்தமாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் கோபமாய் இருக்கும்போது இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்த்து நிற்கும்போது இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்த்து நிற்கும்போது இவர்கள் பொறுமையாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் கலங்கி இருக்கும்போது இவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். மற்றவர்கள் சாபமாகும்போது இவர்கள் ஆசீர்வாதமாகிறார்கள்.

ஏழைப்பாவி நான்
சாந்தம் எனக்களியும்
ஏழை பலவீனன் நான்
தாழ்மையை எனக்கருளும்.

நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்

ஏப்ரல் 29

“நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்”  வெளி 3:17

கர்த்தர் தமது ஏழை மக்களைப் பார்த்து உங்களுக்காக நான் சவதரித்து வைத்திருக்கிற காரியங்களைப்பற்றி, நீங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் என்று சொல்வது வேறு. பெருமைக்கொண்ட பேர் கிறிஸ்தவன் தான் ஐசுவரியவானென்று சொல்லிக்கொள்வது வேறு என்கிறார். ஆவியின் சிந்தையுள்ளவர்கள் எப்போதும் தங்களுடைய வறுமையை உணருகிறபடியால் தங்களை வெறுத்து தங்களுக்கு வேண்டியதையெல்லாம் கிறிஸ்துவின் நிறைவிலிருந்து பெற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுகிறார்கள். நம்முடைய பக்தியயும், செய்கையையும், ஐசுவரியத்தையும்பற்றி நாமே மெச்சிக்கொள்வது நல்லதல்ல. அப்படி செய்தால் இயேசுவைவிட்டு நம் கண்களைத் திருப்பிவிட்டோம் என்றே பொருள். சாத்தானும் நம்மேல் ஜெயமடைவான். இரட்சகர் பாதத்தில் விழுந்து நமது குறைவுகளை உணர்ந்து அவருடைய நிறைவிலிருந்து எதையும் செய்யவும் எந்தச் சிலாக்கியத்தையும் அனுபவிக்கத்தக்கதாக தேடும்போதுதான் நாம் சுகமுடன் இருப்போம்.

தங்களை ஐசுவரியவான்களென்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து ஆண்டவர் நிர்ப்பாக்கியமுள்ளவரும், பரிதபிக்கத்தக்கவரும், தரித்திரரும், குருடரும், நிர்வாணியுமானவர்கள் என்று சொல்லுகிறார். இவர்கள் தம்மிடம் வந்து நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், வெண் வஸ்திரத்தையும் பார்வையடையும்படிக்கு கண்ணுக்குத் கலிக்கத்தையும்  வாங்கிக்கொள்ளச் சொல்கிறார். நம்மிடம் இருக்கும் எதையும்பற்றியும் நாம் பெருமை அடையாதிருப்போமாக. தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், பரலோக இராஜ்யம் உங்களுடையது. ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ என்கிறார். நீங்கள் ஒருபோதும் எதிலும் பெருமையடையாமல் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

என் நிர்ப்பந்தத்தைப் பாருமேன்
நான் நிர்வாணி, குருடன்
ஒன்றுமற்ற பாவி நான்
முற்றிலும் அபாத்திரன்
உமது பாதம் நம்பினேன்
இல்லையேல் கெடுவேன்.

தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு

ஏப்ரல் 28

“தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு” 1.பேதுரு 1:5

தேவனுடைய ஜனங்கள் எல்லாரும் தேவன் தங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று எண்ணி தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறார்கள். இப்படி ஜெபிப்பது மட்டும் போதாது, வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்து, அவைகள் நிறைவேறும் என்று விசுவாசத்தோடு எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். விசுவாசத்தினால்தான் தேவ வல்லமை நம்மிடமிருந்துப் புறப்படும். விசுவாசத்தினால்தான் தேவ வாக்கைப்பிடித்து கிருபாசனத்துக்குச் சமீபம் சேருகிறோம். மரணத்துக்கும்கூட காக்கப்படுகிறோம்.

அவிசுவாசத்தால் நாம் தேவனைவிட்டு விலகி அலைந்து திரிந்து, பாவத்துக்கும் புத்தியீனத்துக்கும் உள்ளாகிறோம். ஜீவனுள்ள தேவனை விட்;டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களுக்கு இல்லாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். உங்களில் ஒருவரும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு அனுதினமும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். தேவன் நம்மை மிருகங்களைப்போல் அல்லாது புத்தியுள்ள சிருஷ்டிகளாகத்தான் பாதுகாப்பார். அவர் உன்னைச் சவாரி பண்ணுகிறவன் குதிரையைப் போலும் கோவேறு கழுதையைப்போலும் கடிவாளத்தில் இழுக்கிறதுபோல் இழுக்காமல், அன்புள்ள பிள்ளைகளைப்போல் நடத்தி, ஆசையுள்ள சிருஷ்டிகளைப்போல் காப்பார். அவர் வல்லமை உங்களுக்கு அவசியம் வேண்டும். அவர் வல்லமையை நம் பிள்ளைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். விசுவாசிகளும் விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் ஜெபிக்கும் போதுதான் அவரோடு பிணைக்கப்பட்டிருக்க முடியும்.

தேவ கரம் என்னைக் காக்கும்
தீய்க்கும் தண்ணீருக்குக் தப்புவேன்
மரணம் என்மீது வரினும்
ஒருகாலும் பயப்படேன்.

பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்

ஏப்ரல் 27

“பிரியமானவர்களுக்குள் முன்குறித்திருக்கிறார்”  எபேசி. 1:5-6

இயேசுகிறிஸ்துவானவர்தான் இப்பிரியமானவர். அவரின் பிதாவோ இவரை அளவற்றவிதமாய் நேசிக்கிறார். அவரை அவர் ஜனங்கள் நேசிக்கிறார்கள். நேசிக்கத்தக்கவர். அவர் தன்மையும், வாழ்க்கையும் நேசிக்கத்தக்கவைகள். தேவ ஜனங்கள் யாவரும் இவர்மூலமாய் தேவனிடத்தில் சேருகிறார்கள். இவர் மேலேயே இவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். அவரோடு ஐக்கியப்பட்டு அவருடன் ஒன்றாககக் காணப்படுகிறார்கள். அவரிலே பார்க்கும்போது தேவனுடைய பார்வையில் அருமையானவர்களும் நேசிக்கப்படத்தக்கவர்களுமாய் இருக்கிறார்கள்.

தேவன் தம் பிள்ளைகளை முற்றும் அழகுள்ளவர்களென்று சொல்லி, அவர்கில் கறையில்லை என்கிறார். அன்பரே! நம்மில் நாமே குறைவுள்ளவர்கள், மகா பரிசுத்தருக்கு வெறுப்புண்டாக்குகிறார்கள். ஆனால், கிறிஸ்துவிலே நாம் பரிசுத்தர், நீதிமான்கள், சவுந்தரியவான்கள். அவர் நீதியால் நாம் உடுத்தப்பட்டிருப்பதால் தேவன் நம்மை நீதிமான்களென்கிறார். அவருடைய ஆவியால் நாம் நிரப்பப்படும்போது தேவன் நம்மை நேசிக்கத்தக்கவர்கள் என்கிறார். இயேசுவின்மூலமன்றி வேறு வழியே சென்றால் தேவன் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார். பிரியமானவர்மூலம் நம்மை அங்கீகரித்துக்கொள்வதினால், தம்முடைய கிருபையை யாவரும் கண்டு பிரமிப்பு அடையும்படி அதை மகிமைப்படுத்துகிறார். விசுவாசிகளாக தேவன் அங்கீகரித்துக் கொள்கிறார். இதைவிட அதிகமாய் அவர் நம்மை அங்கீகரித்துக் கொள்கிறார். இதைவிட அதிகமாய் அவர் நம்மை அங்கீகரிக்கப் போவதில்லை. நாம் அங்கீகரிக்கப்பட்டோம் என்பதை அதிக திட்டதாய் அறிந்து அதை அதிக சந்தோ}மாய் அனுபவிக்கலாம். ஆனால் இப்பொழுது இருக்கிறதிலும் அதிகமாய் நாம் அங்கீகரிக்கப்படவும் மாட்டோம்.

இயேசுவுக்கு நன்றியாக
அவர் ஒளியில் நடப்பேன்
முழுவதும் சுத்தனாகுமட்டும்
அவரையே பின்பற்றுவேன்.

எசேக்கியா மனமேட்டிமையானான்

ஏப்ரல் 26

“எசேக்கியா மனமேட்டிமையானான்” 2.நாளா. 32:25

எசேக்கியா மனமேட்டிமையில் அதிகம் வளர்ந்து விட்டான். அவன் நல்லவன்தான். சற்று நேரத்துக்கு முன்னே தேவன்புக்குரிய சாட்சி பெற்றான். நாம் மாம்சத்தின்படி பெருமை வாய்ந்தவர்களானபடியால் தேவன் நமக்குத் தயவு காட்டும்போது நாம் வெகு அதிகமாய் இன்னும் மனமாட்டிமை கொள்கிறோம். தேவன் சோதிக்கும்போது  முறுமுறுக்கிறோம். தேவன் அதிகமாய் தம்மை நமக்கு வெளிப்படுத்தும்போதுதான் டிடிடிடிடி அதிகம் சோதிப்பார். ஆகவே நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பெருமையைப் பகைக்கிறது போல் வேறெதையும் அவ்வளவு அதிகம் பகைக்கிறதில்லை. அடிகனநநந445வர் அதைச் சகிக்க அவ்வளவு அதிகம் பகைக்கிறதில்லை. அவர் அதைச் சகிக்க மாட்டார். ஆனாலும் நாம் பெருமையில்தான் அதிகம் விழுந்து விடுகிறோம்.

பெருமையுள்ள இருதயம் நல்ல கனிகளைக் கொடாது. தாழ்மையுள்ள இருதயம் ஆவியின் கனிகளைக் கொடுக்கும். பெருமையால், பகையும் விரோதமும், பாகுபாடும், இருதய கடினமும், அடையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பெருமைப்பட்டால் தேவன் நம்மை கீழேத் தள்ளி எசேக்கியாவின் விஷயத்தில் செய்ததுப்போல் நமக்கும் செய்ததுப்போல் நமக்கும் செய்துவிடலாம். சாத்தான் நாம் பெருமையில் வளர வேண்டும் என்பதால் நாம் ஜெபம்பண்ணுவதை விட்டுவிடச் செய்வான். ஜெபம்செய்வதை நிறுத்துவோமானால் சாத்தானுடைய ஆதிக்கத்திற்குக் கீழே இருப்போம். அவனோடிருந்தால் பெருமை வந்துவிடும். ஆகவே கிருபை பெறுமுன் எப்படி இருந்தோம். கிருபையை பெறாவிட்டால் எப்படி இருப்போம். கிருபையினால் தேவன் நம்மை இரட்சிக்காவிட்டால் நம்முடைய நிலைமை எப்படி இருக்குமென்று எண்ணி தாழ்மையாய் இருப்போமாக.

இயேசுவே உம்மைப்போல் நான்
தாழ்மையுள்ளோன் சுத்தவான்
சாந்தம் உள்ளவனாக
இருக்கச் செய்யும் தேவன்.

ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

ஏப்ரல் 25

“ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” தீத்து 2:13

கிறிஸ்தவன் எதிர்பார்க்க வேண்டியவன். அவனுக்கு வேண்டிய நல்ல காரியங்கள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கிருக்கும் வாக்குத்தத்தங்கள் வெளிப்படப்போகிற மகிமையைப் பற்றியது. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வரப்போகும் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் வந்தார். ஊழியம் செய்தார். துன்பப்பட்டார். பிராயச்சித்தம் செய்தார். திருப்பி போகும்போது நான் மகிமையாய் மறுபடியும் வருவேனென்று வாக்குக் கொடுத்தார். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குப் போய் இப்போது நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நம்மை ஆசீர்வதிக்க சீக்கிரம் வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் ஆறுதல் அடைந்து புத்திரசுவிகாரத்தை அடைவார்கள். நாமும் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆட்டவரோடு என்றென்றுமாய் இருப்போம்.

இது நம்முடை நம்பிக்கை, இந்த நம்பிக்கையை எதிர்ப்பார்த்துதான் நாம் வாழ வேண்டும். மரணம் என்று எங்கும் சொல்லவில்லை. மரணத்தையல்ல, இயேசுவின் வருகையே எதிர்நோக்கி ஜீவிக்க வேண்டும். பக்தனாகிய ஏனோக்கு இப்படித்தான் ஜீவித்தான். அவன் தேவனோடு சஞ்சரித்து அவருக்குப் பிரியமாய் நடந்தபடியால் பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டான். அப்போஸ்தலர்களும் ஆதி கிறிஸ்தவர்களும் இப்படித்தான் வாழ்ந்ததால் நம்மைப்போல் இவ்வுலக காரியங்களால் அத்தனை வருத்தம் அடையரிருந்தார்கள்.

நம்பிக்கையால் ஏவப்பட்டு
கர்த்தரை எதிர்ப்பார்ப்பேன்
மகிமையோடு வருவார்
என்னையும் தம்மிடம் சேர்ப்பார்.

Popular Posts

My Favorites

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்

அக்டோபர் 02 "முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்" ரோமர் 8:37 ஒவ்வொரு விசுவாசியும், தன் சுபாவத்தோடும், உலகத்தோடும், மாம்சத்தோடும் போராட வேண்டியிருக்கிறது. ஊழியம் செய்யத் துவங்கினால் அவனுக்கு மனமடிவுண்டாக்கும் காரியங்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. சாத்தான்தான் விசுவாசிக்கு முக்கிய...