பாடல்கள்

Home பாடல்கள்

ஆயனே தூயனே வாரும்

ஆயனே தூயனே வாரும்
இந்த பாவியை உம் மந்தையில் சேரும்
பாவியை உம் மந்தையில் சேரும்
பாதைகள் மாறியே போனேன்
உலக மாயையால் பாவியாய் ஆனேன் ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே
தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே
மானிடர் சுமைகளை சிலுவையாய்
நீர் சுமந்ததை இப்புவி அறியுமே
மானிடர் சுமைகளை சிலுவையாய்
நீர் சுமந்ததை இப்புவி அறியுமே
கேளுங்கள் தரப்படும் என்றவர்
நீர் கேடுகள் அழிக்கவே பிறந்தவர் ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

நெஞ்சிலே நிம்மதி இல்லையே
உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
நெஞ்சிலே நிம்மதி இல்லையே
உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
வஞ்சகர் வலைதனில் மாயமே
அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே
வஞ்சகர் வலைதனில் மாயமே
அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே
தாயினை மிஞ்சிடும் அன்பையே
உம்மில் காண்கிறேன் கர்த்தரே உம்மையே ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

அன்பு கொண்ட மனிதனே

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே
இன்னல் காணும் இந்த உலகில்
எந்த நன்மையும் இல்லையே
இங்கு காணும் இன்பம் யாவும்
இடையில் தோன்றும் மாயையே

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

கல்லும் மலையும் கடந்து சென்றே
கடவுளைக் காண முடியுமோ
உள்ளும் புறமும் உனக்குள் வாழும்
தெய்வத்தை நீ மறந்ததேன்
எல்லையில்லா அன்பை நீயும்
இயேசுவிடத்தில் காணலாம்
எல்லையில்லா அன்பை நீயும்
இயேசுவிடத்தில் காணலாம்

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

அல்லும் பகலும் அலைந்து உழைத்தும்
மனதில் நிம்மதி இல்லையே
கொல்லும் துன்பம் எதையும் வெல்ல
வல்ல தேவன் அழைக்கிறார்
கள்ளமில்லா இயேசு அன்பை
கண்டு நீயும் மகிழலாம்
கள்ளமில்லா இயேசு அன்பை
கண்டு நீயும் மகிழலாம்

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

மின்னல் போல மனித வாழ்வு
இடையில் தோன்றி மறையுமே
இன்று நீயும் மனந்திரும்பி
மகிமை வாழ்வு அடையலாம்
அண்ணல் இயேசு அன்புகூர்ந்து
அருகில் உன்னை அழைக்கிறார்
அண்ணல் இயேசு அன்புகூர்ந்து
அருகில் உன்னை அழைக்கிறார்

 

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

ஆண்டவர் இயேசு வருகின்றார்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்
ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

பாவத்தின் இருளைப் போக்கியவர்
பாரச் சிலுவையைத் தோளில் தூக்கியவர்
பாவத்தின் இருளைப் போக்கியவர்
பாரச் சிலுவையைத் தோளில் தூக்கியவர்
பன்னிரு சீடரைக் காட்டியவர்
பரம தந்தையின் பாதையைக் காட்டியவர்
பன்னிரு சீடரைக் காட்டியவர்
பரம தந்தையின் பாதையைக் காட்டியவர்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

மறுபடி வருவேன் என்ற தெய்வம்
எங்கள் மனுக்குலம் காக்கவே வந்த தெய்வம்
மறுபடி வருவேன் என்ற தெய்வம்
எங்கள் மனுக்குலம் காக்கவே வந்த தெய்வம்
தனக்கென்ற வழியைக் காட்டியவர்
இந்த தாரணி வணங்கிடும் தெய்வமவர்
தனக்கென்ற வழியைக் காட்டியவர்
இந்த தாரணி வணங்கிடும் தெய்வமவர்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

வேதத்தின் வார்த்தையில் பொருளானார்
நல்ல வாக்குத் தத்தங்களைத் தரலானார்
வேதத்தின் வார்த்தையில் பொருளானார்
நல்ல வாக்குத் தத்தங்களைத் தரலானார்
பாக்கியம் பெற்றிட இவர் நாமம்
என்றும் நோக்கியே ஸ்தோத்திர துதி செய்வோம்
பாக்கியம் பெற்றிட இவர் நாமம்
என்றும் நோக்கியே ஸ்தோத்திர துதி செய்வோம்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்
ஆண்டவர்  இயேசு வருகின்றார்

நீர் கொடுத்த வாழ்வு இது

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
பார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன்
தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன்
தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன்
தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன்
மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன்
மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன்
மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன்
மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன்
ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன்
அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன்
ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன்
நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன்
நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் பெற்றேன்
நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன்
நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் பெற்றேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன்
இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன்
இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன்
இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன்
கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன்
கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்
கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன்
கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
பார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா…

நிலையென்று வாழ்வை

நிலையென்று வாழ்வை நினைத்திடாமல்
நிமிர்ந்து நீ சிலுவையைப் பாரு
இறைமகன் இயேசுவே எனைக் காரும்
என்று இதயத்தால் அவரையே கேளு
நிலையென்று வாழ்வை நினைத்திடாமல்
நிமிர்ந்து நீ சிலுவையைப் பாரு
இறைமகன் இயேசுவே எனைக் காரும்
என்று இதயத்தால் அவரையே கேளு

நித்திய வாழ்வுக்கு சத்தியம் தந்திடும்
தேவனின் திருமுகம் பாரு
நித்திய வாழ்வுக்கு சத்தியம் தந்திடும்
தேவனின் திருமுகம் பாரு
வார்த்தையைத் தந்துன்னை மீட்டிடும் தெய்வம்
நம் இயேசுவைப் போல் வேறு யாரு
வார்த்தையைத் தந்துன்னை மீட்டிடும் தெய்வம்
நம் இயேசுவைப் போல் வேறு யாரு

நிலையென்று வாழ்வை நினைத்திடாமல்
நிமிர்ந்து நீ சிலுவையைப் பாரு

அலைகின்ற மனதிற்கு ஆறுதல் தந்திட
ஆண்டவர் இயேசுவைத் தேடு
அலைகின்ற மனதிற்கு ஆறுதல் தந்திட
ஆண்டவர் இயேசுவைத் தேடு
பாவக் கறைதனை கழுவிடும் பரமனின் மைந்தனின்
நாமத்தையே தினம் பாடு
பாவக் கறைதனை கழுவிடும் பரமனின் மைந்தனின்
நாமத்தையே தினம் பாடு

நிலையென்று வாழ்வை நினைத்திடாமல்
நிமிர்ந்து நீ சிலுவையைப் பாரு

ஓடியே வந்தவர் காலடியில்
முழந்தாளிட்டு மன்னிப்புக் கேளு
ஓடியே வந்தவர் காலடியில்
முழந்தாளிட்டு மன்னிப்புக் கேளு
நாடியே வந்துன்னை வாரியே அணைத்தவர்
மந்தையில் சேர்ப்பார் நீ பாரு
நாடியே வந்துன்னை வாரியே அணைத்தவர்
மந்தையில் சேர்ப்பார் நீ பாரு

நிலையென்று வாழ்வை நினைத்திடாமல்
நிமிர்ந்து நீ சிலுவையைப் பாரு
இறைமகன் இயேசுவே எனைக் காரும்
என்று இதயத்தால் அவரையே கேளு
நிலையென்று வாழ்வை நினைத்திடாமல்
நிமிர்ந்து நீ சிலுவையைப் பாரு
நிமிர்ந்து நீ சிலுவையைப் பாரு

பேரின்பக் கன்மலையே என்னை

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
யாரையும் நம்பி விடேன்  இந்த
நானில மீதினிலே
யாரையும் நம்பி விடேன்  இந்த
நானில மீதினிலே
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

தேசத்தை விட்டு வந்தேன் பிள்ளைப்
பாசத்தையும் பிரிந்தேன்
நேசத்தைத் தந்து என்னை இங்கு
மீட்டவரே வாரும்
ஆயனே இங்கு வந்து  என்னை
ஆதரித்துக் கொள்ளும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

வேதத்தில் மனம் லயித்தேன் உமது
போதனையில் திளைத்தேன்
என் மகனே என்று என்னை நீர்
கூப்பிட்ட குரல் கேட்டேன்
அந்நியன் என்றே என்னை கணமும்
தள்ளி விடாதேயும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

அந்தி பகல் மறையும் அப்பா உன்
ஆறுதல் மறைந்திடுமோ
மந்திர மாயமெல்லாம் உமது
மலரடி கண்டிடுமோ
ஐயனே அழைக்கின்றேன் என்
அருகினில் வாருமையா

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே …

பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை

பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை மன்னியுங்கள்
கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்
கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்
உம்மை அறியாமல் ஒரு ஊதாரியாய் இருந்தேன்
கண்கள் திறந்தீரே என் கவலைகள் தீர்த்தவரே
கண்கள் திறந்தீரே என் கவலைகள் தீர்த்தவரே

உமது அடிச்சுவட்டில் புதிய வாழ்வைத் தொடங்குகிறேன்
சத்திய வழி நீரே நித்திய ஜீவனும் நீரே ஐயா
சத்திய வழி நீரே நித்திய ஜீவனும் நீரே ஐயா
இறப்பின் விடுதலையை உலகில் மெய்ப்பித்த இரட்சகரே
தந்தையின் வழிகள் என் வழியெனச் சொன்னவரே
தந்தையின் வழிகள் என் வழியெனச் சொன்னவரே

வேதத்தின் பொருள் நீரே – ஜீவ நாதத்தின் ஒளி நீரே
பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவகுமாரனும் நீரே
பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவகுமாரனும் நீரே
தவத்தின் தலைவராகி எம்மைக் காத்திட வந்தவரே
உள்ளக் கோவிலிலே என்றும் உறைந்திட வாரீரோ
உள்ளக் கோவிலிலே என்றும் உறைந்திட வாரீரோ

மந்தைக் கூட்டத்துக்குள் நானும் சிந்தையைப் பறிகொடுத்தேன்
தந்தையே எனை மேய்க்கும் தலைவனும் நீரே ஐயா
தந்தையே எனை மேய்க்கும் தலைவனும் நீரே ஐயா
மன்னுயிர் காத்திடவே செஞ்சிலுவை சுமந்தவரே

என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்
என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்
என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

அன்பு வலை வீசி எம்மை ஆண்டிடவே
நீர் அருள் வடிவாக வந்த தேவமகன்
அன்பு வலை வீசி எம்மை ஆண்டிடவே
நீர் அருள் வடிவாக வந்த தேவமகன்
துன்பச் சுமை நீக்க வந்த பேரொளியே
துன்பச் சுமை நீக்க வந்த பேரொளியே
எங்கள் தூயவரே உம்மைப் பணிந்து பாடுகிறோம்
தூயவரே உம்மைப் பணிந்து பாடுகிறோம்

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

தந்தை உம்மைச் சிந்தையிலே ஏற்றிடவே
நாளும் தேடுகின்ற உள்ளங்களோ கோடி இங்கே
தந்தை உம்மைச் சிந்தையிலே ஏற்றிடவே
நாளும் தேடுகின்ற உள்ளங்களோ கோடி இங்கே
அன்பு வெள்ளம் பெருகி இங்கே பாயுதப்பா
அன்பு வெள்ளம் பெருகி இங்கே பாயுதப்பா
உமது ஆறுதலைக் காண வந்த வேளையிலே
ஆறுதலைக் காண வந்த வேளையிலே

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

சத்தியத்து நாயகனாய் வந்தவரே
உலகச் சர்வ வல்ல தேவனாகி நின்றவரே
சத்தியத்து நாயகனாய் வந்தவரே
உலகச் சர்வ வல்ல தேவனாகி நின்றவரே

நித்தியத்து ஜீவனையும் தாருமையா
நித்தியத்து ஜீவனையும் தாருமையா
இயேசு நாயகனே மனமிரந்து வேண்டுகின்றோம்
நாயகனே மனமிரந்து வேண்டுகின்றோம்

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

உத்தமமான தெய்வம் – இயேசு

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்
உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்
சத்தியமான தெய்வம் – சங்கடம்
காப்பதிலும் தெய்வம்
உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

நித்தியமான தெய்வம் – நெஞ்சினில்
வாழுகின்ற தெய்வம்
நித்தியமான தெய்வம் – நெஞ்சினில்
வாழுகின்ற தெய்வம்
பத்திய வார்த்தையினால் – எங்களை
பாது காக்கும் தெய்வம்
பத்திய வார்த்தையினால் – எங்களை
பாது காக்கும் தெய்வம்

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

சிலுவையைச் சுமந்து வந்த – பாவச்
சிறையினை மீட்ட தெய்வம்
சிலுவையைச் சுமந்து வந்த – பாவச்
சிறையினை மீட்ட தெய்வம்
சீர் கெட்ட மானிடர்காய் – தன்னையே
ஒப்புக் கொடுத்த தெய்வம்
சீர் கெட்ட மானிடர்காய் – தன்னையே
ஒப்புக் கொடுத்த தெய்வம்

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

பரிசுத்த வார்த்தை தந்தே – எம்மை
மீட்க வந்த தெய்வம்
பரிசுத்த வார்த்தை தந்தே – எம்மை
மீட்க வந்த தெய்வம்
அசுத்த ஆவிகளை எம்மைவிட்டு
அகற்ற வந்த தெய்வம்
அசுத்த ஆவிகளை எம்மைவிட்டு
அகற்ற வந்த தெய்வம்

உத்தமமான தெய்வம் – இயேசு
உன்னதத்திலும் தெய்வம்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது

வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது….

Popular Posts

My Favorites