A Ennai Aatkonda Yesu

Allikodukkum Anbukarangal

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்
இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா…
அன்பைக்காட்டி அரவனைக்கும்
நேசரின் கரங்கள்…

வருத்தப்பட்டு பாரம்சுமப்போர்
பாரம் தாங்கிடுவார்…
நோய்கள் நீக்கி பேய்கள் போக்கி
சுகமும் அருளுவார்…

வானந்திறக்கும் வள்ளல் இயேசு
வாரி வழங்குவார்… –
ஆசீர்வதித்து பாதுகாத்து
மேன்மைப் படுத்துவார்…

ஜீவகிரீடம் ஜீவநதிகள்
ஜீவ கனியுண்டு…
நித்திய தேவன் நித்தமும் நம்மை
மகிழ்ச்சிப் படுத்துவார்… –