P

Paavi Nee Odivaa

பாவி நீ ஓடி வா பாவி நீ ஓடி வா – அன்பர் இயேசு அழைக்கிறார் பாவம் நீக்கிட வா – உந்தன் பாரம் போக்கிட வா உந்தனின் பாவத்தினால் சிந்திய இரத்தத்தைப் பார் தந்தை தம் அன்பினாலே – உன்னைப் பந்தமாய்ப் பாதுகாப்பார் வெண்ணங்கி நீ தரிக்க முள்முடி சூட்டினாரே தீராத பாவம் தீர்க்க – நீயும் நேராக இன்றே வாராய் ஆத்தும தாகம் தீர்க்க ஆண்டவர் கூறுகின்றார் தாகம் அடைந்தேன் என்று – நீயும்…

P

Paar Potrum Venthan

பார்போற்றும் வேந்தன் பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து பாலகனாக பிறந்தாரே பிறந்தாரே இயேசு பிறந்தாரே என்னை மீட்டிட வந்தாரே பாரினில் பாலகனாய் விண்ணில் மன்னவன்தான் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில் ஏழைக்கோலமாய் பிறந்தாரே பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே வந்தார் மரித்தார் உயிர்த்தாரே தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட எளியோனாய் எனக்காக வந்தாரே மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே வருவார் இறைவாழ்வு தருவாரே

P

Paavi Enmelae

பாவி என் மேலே கிருபையாய் பாவி என் மேலே கிருபையாய் இருந்தருளும் பாவத்தை பாராத சுத்தக் கண்ணனே தாழ்மையுள்ள யாவருக்கும் கிருபையை அள்ளித் தருபவரே மார்பில் அறைந்து ஓடிவந்தேன் மன்னித்து என்னை ஏற்றருளும் வெறுமை எல்லாம் மாற்றிடுமே வறுமை எல்லாம் நீக்கிடுமே முத்திரை மோதிரம் தந்திடுமே முத்தங்களால் என்னை அணைத்திடுமே ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்திடும் உன்னதரே என்னை உம்மில் இணைத்தீரே அதுதான் உமது கிருபையே

P

Pothum Pothum Intha

போதும் போதும் இந்த உலகத்தின் போதும் போதும் இந்த உலகத்தின் துன்பம் வாரும் வாரும் எங்கள் இயேசுவே வாரும் கல்லான மனங்களெல்லாம் கனிய செய்யும் பொல்லாத மனிதர்களை நீரே மாற்றும் உலகத்தின் பாவமே நிறைந்து வழியுது தீமைகள் நாளக்கு நாள்பெருகி வருகிறது எங்கும் அநீதி சுடர் விட்டு எரிகிறது எங்களின் தெய்வமே எங்களை காருமே ஆத்தும பாரத்தை எனக்கு தந்தீர் நீர் ஆத்தம ஆதாயம் நானும் செய்திட அழிந்திடும் மாந்தரை உம்மிடம் சேத்திட உன்னதர் இயேசுவே வல்லமை…

P

Parama Azhaippin

பரம அழைப்பின் பந்தய பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா -2 இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன் இயேசு ராஜவின் இந்த வேலைக்காக மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனை தான் இடர்கள் வந்தாலும் விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் எனக்காக இயேசு நியமித்த இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் இயேசு ராஜாவை நான் காணவே வாஞ்சிக்கிறேன்…

P

Pradhana Aasariyarae

பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே எங்கள் பிரதான ஆசாரியரே யெஷுவா -8 எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால் என்றென்றும் பூரணப்படுத்தினீரே எங்கள் பிரதான ஆசாரியரே இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர கிருபை செய்தவரே எங்கள் பிரதான ஆசாரியரே தோளிலே எங்களை சுமப்பவரே இதயத்தில் எங்களை பொறிந்தவரே நியாபக குறியாய் வைப்பவரே எங்கள் பிரதான ஆசாரியரே பாவம் இல்லாத ஆசாரியரே என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே…

P

Puthiyulla Isthree Than Veetai

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள் தேவனை முதலில் தேடுகிறாள் வசனத்தை தினம் நாடுகிறாள் கணவன் தலையில் கிரீடம் கீழ்ப்படிகிற மேடம் இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும் இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி ஆகிறாள் கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள் நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள் சோம்பலின்…

P

Paranae En Ithayathil

பரனே என் இதயத்தில் வாரும் பரனே என் இதயத்தில் வாரும் பரநோக்கம் நிறைவேற்ற வாரும் அனுதினம் என்மனம் கழுவிடும் அழகிய புதுமனம் தந்திடும் பரிவுடன் பாவியை கண்டிடும் – என் சுயமதை திருசலவை செய்திடும் அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சை புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை அழுகிய சிந்தனை மங்கவே மனதினுள் வசனங்கள் தங்கவே அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே அடைக்கலம் அருளுமே துங்கவே திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும் கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன் கிருபை…

P

Pithavae Arathikindrom

பிதாவே ஆராதிக்கின்றோம் பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் – உம்மை மகனாக தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் ராஜாக்களும் நாங்களே ஆசாரியர்களும் நாங்களே சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே மகிமைக்கு பாத்திரரே மங்காத பிரகாசமே ஸ்தோத்திரமும் கனமும வல்லமையும் பெலனும் மாட்சிமையும் துதியும் எப்போதும் உண்டாகட்டும் பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே உமது செயல்களெல்லாம் அதிசயமானவைகள் உமது வழிகளெல்லாம் சத்தியமானவைகள்

P

Paraloga Santhosam

பரலோக சந்தோஷம் பாரினில் பரலோக சந்தோஷம் பாரினில் வந்து என்னைப் பரவசப்படுத்துகிறதே பரமபிதா நீர் எந்தன் தந்தை பாவி நான் உந்தன் பிள்ளை ஆனேன் புத்திர சுவீகார ஆவியினால் நீர் என்னைப் பிரித்தெடுத்தீர் புரியாத உணர்வாலே எனைத் தேற்றுவீர் அது உன்னத பெலன் அல்லவா என் பிரிய இயேசு என் இனிய நேசர் என்னோடு இருப்பார் என்றும் ஜீவ ஒளியாக எந்தன் இருள் வாழ்வில் வந்தார் தெய்வீகமான அன்பே பரலோகம் எனக்குள் உருவாகுதே இங்கே அந்தப் பரமனைக்…