I

Isravelin Devanae

இஸ்ரவேலின் தேவனே இஸ்ரவேலின் தேவனே சதாகாலமும் உள்ளவரே உள்ளங்கையில் என்னை வரைந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி சொல்லுவேன் நாதன் இயேசுவின் நாமத்திற்கே கடந்த ஆண்டு முழுவதும் என்னை கண்ணின் மணிபோல் என்னை காத்தவரே இனிமேலும் என்னை நடத்திடுவார் கடைசி வரைக்கும் கூட இருப்பார் அவர் உண்மை உள்ளவரே அவர் அன்பு மாறாததே தாயின் கருவில் உருவான நாள்முதல் கருத்துடன் என்னை காத்தவரே கிருபையாய் என்னை நடத்தினீரே ஆசீர்வதித்தவரே உங்க கிருபை மாறாததே என்றும் உயர்ந்தது உம்…

I

Isai Mazhaiyil

இசைமழையில் தேன்கவி பொழிந்தே இசைமழையில் தேன்கவி பொழிந்தே கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் வான்மலர்தான் இப்புவியினிலே மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு வாழ்வின் மீட்பின் பாதை இதே மாசற்றவர் நம் வாழ்வினிலே மகிமையென்றே கண்டோமே இன்று விடிவெள்ளியாக தேவபாலன் தாழ்மை தாங்கி அவதரித்தார் உலகம் என்னும் பெதஸ்தாவிலே கரைதனில் பல ஆண்டுகளாய் பாதை தெரியாதிருந்த நம்மை வாழ வைக்க வந்துதித்தார்

I

Immadum Kaathirae

இம்மட்டும் காத்தீரே இம்மட்டும் காத்தீரே இனிமேலும் நடத்துவீரே எதைக் குறித்தும் நான் கலங்கவில்லை எல்லாமே பார்த்து கொள்வீர் உலகத்தின் தேவைகளை உம் பாதம் இறக்கி வைத்தேன் உம் அன்பின் கரம் நீட்டும் அற்புதமாய் நடத்தும் உம்மையே பார்த்துவிட்டேன் என்னை மகிழ்ச்சியாக்கும் இருளெல்லாம் நீங்கிடட்டும் வெளிச்சம் உதித்திடட்டும் அதினதின் காலத்திலே -எல்லாம் நேர்த்தியாய் செய்திடுவீர் குறைவெல்லாம் மாறிடுமே நிறைவாக நடத்திடுமே எந்தன் கன்மலையும் நீர் துதிகளின் பாத்திரர் நீர் ஆலயத்தில் நான் அபயம் இட்டால் என் கூக்குரல் கேட்பவர்…

I

Irivaa Yesuvae

இறைவா இயேசுவே இறைவா இயேசுவே உம்மை நான் அழைக்கிறேன் என்னுள்ளம் நீர் தங்கும் ஆலயம் ஆலயத்தை ஒருவன் கெடுத்தால் அவனை நான் கெடுப்பேன் என்றீர் ஆலயத்திலே சுத்தம் நிலவ ஆலயத்திலே ஜெபமும் பெருக ஆவியால் நிரப்பும் என்னை – உமது ஆவியால் நிரப்பும் என்னை அன்பு என்னும் தீபம் எரிய இச்சை என்னும் தீமை விலக தூபவர்க்கமாய் வெள்ளை போளமாய் குங்குலியமாய் சாம்பிராணியாய் ஜெபங்களை ஏறெடுப்பேன் – எனது ஜெபங்களை ஏறெடுப்பேன் ஆவியின் கனிகள் பெருக மாம்சத்தின்…

I

Iratha Koddaikullae

இரத்தக் கோட்டைக்குள்ளே இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் இம்மட்டும் உதவின எபினேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனை விட என் தேவன் பெரியவரே தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன் தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப்…

I

Innalil Yesu Naathar

இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் இவ்வண்ணமாய் பரன் செயலை…

I

Itho Oru Thirantha

இதோ ஒரு திறந்த வாசல் இதோ ஒரு திறந்த வாசல் உனக்காக எனக்காக ஏசு தருகிறார் ஒருவனும் பூட்ட முடியாது ஒருவனும் பூட்ட முடியாது – இதை அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட அறுவடை பணியை நாம் செய்திட கட்டுண்ட மக்களை விடுவிக்க சிறைபட்ட ஜனங்களை மீட்டிட சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க சத்ருவின் கோட்டைகளை தகர்த்திட கிராமம் எல்லாம் வீதியெல்லாம் சென்றிட இயேசுவின் ஊழியத்தை செய்திட கால் மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க சிலுவைக் கொடி சேதத்திலே பறந்திட…

I

Iya um thirunamam

ஐயா உம் திருநாமம் ஐயா உம் திருநாமம் அகிலமெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும் கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை கண்டு மகிழ வேண்டும் கழுவப்பட்டு வாழ வேண்டும் இருளில் வாழும் மாந்தர் பேரொளியைக் கண்டு இரட்சிப்பு அடைய வேண்டும் இயேசு என்று சொல்ல வேண்டும் சாத்தானை வென்று சாபத்தினின்று விடுதலை பெற வேண்டும் வெற்றி பெற்று வாழ வேண்டும் குருடரெல்லாம் பார்க்கணும் முடவரெல்லாம் நடக்கணுமே செவிடரெல்லாம் கேட்கணுமே சுவிஷேசம் சொல்லணுமே

I

Iyane Umathu Thiruvadi 

ஐயனே!உமது திருவடிகளுக்கே ஐயனே! உமது திருவடிகளுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம் சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்த்தரவணைத்தீரே அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை யாகவா தரிப்பீரே இருதயந் தனை நீ புதியதே யாக்கும் ஏழையைக் குணமாக்கும் கருணையாய் என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும் நாவிழி செவியை , நாதனே , இந்த நாளெல்லாம் நீர் காரும் தீவினை விலகிநான் திருமுகம் நோக்க தெய்வமே, அருள்கூரும் கைகாலால் நான் பவம் புரி யாமல்…

I

Ivarae Perumaan

இவரே பெருமான் மற்றப் பேர் அல்லவே இவரே பெருமான் மற்றப் பேர் அல்லவே பூமான் – இவரே பெருமான் கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு பவவினை யாதுமே தெரியார் – இப் புவனமீது நமக்குரியார் – இவரே குருடர்களுக் குதவும் விழியாம் – பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம் இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும் வலமையில் மிக்க விபகாரி – எக்…