A

Anbe Kalvari Anbe

அன்பே கல்வாரி அன்பே அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் – எங்கள் பரிகார பலியானீர் காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே

A

Anbaana Yesuvin Anbuthaan

அன்பான இயேசுவின் அன்புதான் அன்பான இயேசுவின் அன்புதான் உலகத்தில் மெய்யான அன்பு தேடி வந்து என்னை கண்டு மீட்ட இரட்சகர் அன்பு நீடிய சாந்தம் தயவுள்ளது தன்னைப் புகழாது பொறாமையில்லை சினமடையாது தீங்கு நினையாது சத்தியத்தில் அன்பு சந்தோஷப்படும் அன்பு திரளான பாவம் மூடும் பூரண அன்பே பயம் விலக்கும் பரிசுத்தஆவியால் தேவ அன்பை எங்கள் உள்ளத்தில் இயேசு ஊற்றினாரே

A

Anathi Devan Un 

அநாதி தேவன் உன் அடைக்கலமே அநாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் – மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் கானக பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை அரும் நீருற்றாய் மாற்றினாரே கிருபை கூர்ந்து மனதுருகும் தூய தேவ அன்பே உன்…

A

Arasanai Kanamal Irupomo

அரசனைக் காணமலிருப்போமோ? அரசனைக் காணமலிருப்போமோ? – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார்! பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் பொன்னடி வணங்குவோம்,…

A

Aaviyaanavare Ennai

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே ஆவியானவரே என்னை நிரப்பிடுமே உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு மகிமையாய் விளங்கிடவே எழுந்தருளின இயேசுவானவர் இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில் என்னை உட்கார செய்ய அநுகிரமம் செய்தீர் ஆவியால் கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள் நிறைவேற செய்யும் ஆவியால் மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து துதிக்கட்டும் ஆவியால் அக்கினி மயமான நாவுகளாலே இறங்கி வந்தீர் ஆவியால் அக்கினி ஜூவாலைகளாக மாற்றி உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்  

A

Anthapakkam Ennai

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள் மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம் மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும் இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே … ஹே ஹே ஹே ஹே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன் நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன்…

A

Aarathanai Aarathanai Aarathanai

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் துடிக்குதே உம் முகத்தை பார்க்கணும் உம்மோடு இணையணும் நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும் உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும் என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ நீரே என் நம்பிக்கை…

A

Arputharaam Yesu Devan

அற்புதராம் இயேசு தேவன் அற்புதராம் இயேசு தேவன் வல்லமை வெளிப்படுதே சுகமடைய பெலன் பெறவே அவரையே அண்டிடுவோம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் வியாதிகள் யாவும் நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே வல்லமையே வெளிப்படுதே பிணிகள் யாவும் நீங்கிடுதே நொருங்குண்ட இதயம் குணப்படுத்த வல்லமை இன்றே வெளிப்படுதே காயங்களை ஆற்றிடுவார் எண்ணை ரசமும் வழிந்திடுதே பாவத்தில் அமிழ்ந்த யாவரையும் தூக்கியே நிறுத்தி காத்தனரே ஆத்துமாவை குணப்படுத்தி அகமதில் மகிழ்ச்சி அளித்தனரே

A

Aarathipen Naan Aarathipen

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் பணிந்து குனிந்து ஆராதிப்பேன் ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் தூதர்களோடு ஆராதிப்பேன் ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் காண்பவரை நான் ஆராதிப்பேன் காப்பவரை நான் ஆராதிப்பேன் வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

A

Anpar Yesuvin Anbu

அன்பர் இயேசுவின் அன்பு அன்பர் இயேசுவின் அன்பு அது அளவிட முடியாது கடற்கரை மணலை கணக்கிடலாம் அவர் அன்பிற்கீடேது அன்பர் இயேசுவின் அன்பு சிலுவை நாயகன் சிந்தியரத்தம் அன்பாய் வழிகிறது சிறுமைபட்ட ஜனங்களை மீட்க இரத்தம் போகின்றது அன்பர் இயேசுவின் அன்பு பாவம் பெருகின இடத்தில் தேவ கிருபை வெளிப்பட்டதே – பாவ மீறுதல் போக்க சிலுவையிலே இரத்த வெள்ளம் பாய்கின்றதே அன்பர் இயேசுவின் அன்பு ஆணிகள் அடித்து தொங்கிய போதும் தனக்காய் அழவில்லை கள்வர்கள் நடுவில்…