V

Vidudhalai Thaarumae

விடுதலை தாருமே என் ஆண்டவா விடுதலை தாருமே என் ஆண்டவா வினை தீர்க்கும் விண்ணரசா நித்தம் நித்தம் கண்ணீரினால் நித்திரையை தொலைத்தேனைய்யா நிந்தை தீர்க்க வாருமைய்யா ஆறுதலின் தெய்வம் நீரே தேற்றுவீரே உம் வார்த்தையால் ஜீவ வார்த்தை நீரல்லவோ யாரும் இல்லை காப்பாற்றிட தோளில் சாய்த்து எனை தேற்றிட நிலை மாற்ற வாருமைய்யா

V

Varathadchanai Kedu

வரதட்சணை கேட்டு கொடுமை வரதட்சணை கேட்டு கொடுமை செய்யாதே நண்பா பண ஆசை எல்லா தீங்குக்கும் காரணமாய் இருக்கின்றது குடும்பத்துக்கொரு பாரமாக தான் இருப்பது போல எண்ணி கண்ணீரோடு காலம் தள்ளும் பெண்களை நினைக்க வேண்டும் மாப்பிள்ளையின் வீட்டார் கேட்ட பணம் இல்லை என்பதாலே பெண்ணைப் பெற்ற தந்தையும் தாயும் கண்ணீர் வடிக்கின்றாரே நான் கேட்க மாட்டேன் ஆனால் அப்பாதான் கேட்கிறாரு என்று சாக்குபோக்கு சொல்லி நழுவி விடாதே பிரதரே பாவப்பட்ட மாமனாரின் வயிற்றில் அடிக்கவேண்டாம் பிரதரே…

V

Vaarthaiyai Anuppiyae

வார்த்தையை அனுப்பியே வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே என் வேதனை உமக்கு புரிகின்றதா என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா என் சோகங்கள் என் காயங்கள் உம் காலடி வருகின்றதா வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன் உன் வேதனை எனக்கு புரிகின்றதே உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன் என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன் உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

V

Vazhiyum Neerae Oliyum

வழியும் நீரே ஒளியும் நீரே வழியும் நீரே ஒளியும் நீரே ஜீவனும் நீரே தேவனும் நீரே நம்பி வந்தேன்  நாயகன் இயேசுவே என்றும் எந்தனின் துணை நீரே நானே வழியும் சத்தியம் ஜீவன் என்று உரைத்த  எந்தன் இயேசுவே மனதின் இருளை போக்கிட வந்த மகிமை நிறைந்த தேவ தேவனே நானிலம் போற்றும் மங்கிடா ஜோதி மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே எந்தன் மேன்மை இயேசு தேவனே உந்தன் வாக்கு…

V

Vetri Kodi Pidithiduvom

வெற்றிக் கொடி பிடித்திடுவோம் வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம் வீரநடை நடந்திடுவோம் வெள்ளம்போல சாத்தான் வந்தாலும் ஆவிதாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் உண்டு – நாம் அலகையை வென்று விட்டோம் காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம் கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம் கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால் விசுவாச கேடயத்தினால்…

V

Vaa Endrazhaikkum Theiva

வா என்றழைக்கும் தெய்வ சத்தம் வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார் உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால் அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார் உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால் அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார் உன் கஷ்டங்கள் அறிவார் உன் கண்ணீரை அறிவார் உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார் உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு உனை வழிகாட்டும்…

V

Vaanam Meethilae En

வானம் மீதிலே என் மன்னன் வருவார் வானம் மீதிலே என் மன்னன் வருவார் மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவார் நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன் என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன் துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை தூதர்கள் போல நான் கானம் பாடுவேன் என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன் நான் நடக்கும் இடமோ தங்கமயமாம் நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம் தூதர்கள் போல நானும் இருப்பேன் என்…

V

Vinnaga Thanthaiye Umathu Naamam

விண்ணக தந்தையே உமது நாமம் விண்ணக தந்தையே உமது நாமம் அர்ச்சிக்க படுவதாக! உமது ராச்சியம் வருக! உமது சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக! எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும் எங்களை சோதனையில் விழவிடாதேயும் தீமையிலிருந்து எங்களை ரச்சித்தருளும் விண்ணக தந்தையே உமது நாமம் அர்ச்சிக்க படுவதாக!

V

Vaana Paraparanae

வானபராபரனே! இப்போ வாரும் எம் மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லா மகிமை, கனமும், துதியும் ஏற்றிட வாருமையா — பக்தரின் மறைவிடமே! ஏழை மக்களின் அதிபதியே! பாதமே கூடும் பாவையர் எமக்கு பரிசுத்த மீயுமையா வாக்கு மாறா தேவா! வாரும் வல்லமையால் நிறைக்க — வான கிருபாசனப் பதியே! நின் கிருபையில் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே –வான தாய் என்னை மறந்தாலும்,…