S

Sthothiram Seivenae

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை -என்றும் அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குருவானை செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குரவானை அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி

S

Senaigalin Karthar

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேராபீன்கள் கேரூபீன்கள் வாழ்த்தும் பரிசுத்தர் பரிசுத்தரே அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா பட்சிக்கும் அக்கினி பாவங்களைத் தண்டிக்கும் பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா பயப்படுவோம் இயேசு நாமத்திற்கு நாங்கள் நடுங்குவோம் அவர் வசனத்திற்கு அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா தேவ மகிமை சூழட்டுமே தேவ கிருபை தாங்கட்டுமே அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

S

Singasanathil Veetrirukkum

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்து விளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பா ஒமேகாவும் ஆனவரே இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை கரங்களில் உடையவரே பரிசுத்தமும் சத்தியமும் – தாவீதின் திறவுகோலை உடையவரே அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும் வெண்கல பாதங்களை உடையவரே

S

Samathanam Venduma

சமாதானம் வேண்டுமா சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம் சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம் நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம் மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம் முழங்காலில் நாம் நின்றுவிட்டால் முடியாது என்று ஒன்றுமில்லை வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால் வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம் வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம் எலியாவும் ஒரு மனிதன்தான் ஜெபித்திட மழை மறைந்ததே மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில் நின்ற மழை அன்று…

S

Salemin Raja Sangayin Raja

சாலேமின் ராசா சங்கையின் ராசா சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் ஸ்வாமி வாருமேன் இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன் சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே உந்தஞ் சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே

S

Singasanathil Veetriruppar

சிங்காசனத்தில் வீற்றிருப்பார் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் தேவன் இயேசுக்கிறிஸ்து துதிகனம் மகிமையெல்லாம் அவருக்கே செலுத்திடுவோம் ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தர் ஆட்டுக்குட்டி ஆனவரே உன்னதமானவரே உலகத்தின் ஒளி நீரே தேவன் சபையில் வாசமாகி நடுவிலே உலாவுகின்றார் அற்புத தேவன் நீரே அதிசயமானவரே இயேசுவின் நாமத்தில் பிதாவே உம்மை தொழுகிறோம் பணிந்திடுவோம் சர்வ வல்லவரே பரிசுத்தமுள்ளவரே

S

Saalem Raja Saaron Roja

சாலேம் ராஜா சாரோன் ராஜா சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர் சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே என் உள்ளத்தில் வாருமே ஆமென் ஆமென் ஆமென் பேரானந்தம் உம் பிரசன்னம் மாறாததுந்தன் வசனம் கேருபீன்கள் உம் வாகனம் உம் சரீரமே என் போஜனம் பூலோகத்தின் நல் ஒளியே மேலோகத்தின் மெய் வழியே பக்தரை காக்கும் வேலியே குற்றம் இல்லாத பலியே நீர் பேசினால் அது வேதம்…

S

Sundhara Parama Deva 

சுந்தரப் பரம தேவ மைந்தன் சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நம்மை ஒன்றாய் கூட்டினார் அருள் முடி சூட்டினார் கிருபையால் தேற்றினாரே – துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன்…

S

Svarna Raagangal Svaram 

ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே வெள்ளி மணியோசைகள் ஜத்தி போடவே ராகங்கள் தாளங்கள் கைத்தாளங்கள் – தந்து உம்மை தினம்தோறும் நான் பாடுவேன் பன்னிரண்டு வருடம் பாடுகள் பட்டவளாய் பற்பல இடங்களில் ஓடி அலைந்து திரிகின்றாள் பார்வேந்தன் இயேசுவின் ஆடையைத் தொட்டாள் அந்தஷணமே குணமடைந்தாள் கானாவூரிலே கல்யாண வீட்டிலிலே திராட்சை ரசமில்லையே இயேசுவைத் தேடியே வந்தனரே ஜாடிகளில் தண்ணீரை நிரப்பிடச் சொன்னார் தண்ணீரை ரசமாக்கினார் எத்தனை அற்புதங்கள் என் வாழ்வில் செய்தீரே…

S

Sinnanchsiriya Padagu Onru

சின்னஞ் சிறிய படகு ஒன்று சின்னஞ் சிறிய படகு ஒன்று நீந்திக் கடலில் சென்றதம்மா இயேசுவை சீடரை சுமந்து கொண்டு இனிதே அசைந்து விரைந்ததம்மா பொங்கி அலைகள் எழுந்ததம்மா அங்கும், இங்கும் அசைந்ததம்மா புயலைக் கண்டு சீடரெல்லாம் பயந்து, கலங்கி வெருண்டாரம்மா இரைச்சல் கேட்டு எழுந்த இயேசு இரையும் கடலை அதட்டிடவே பொங்கின கடலும் ஓய்ந்ததம்மா எங்கும் அமைதி சூழ்ந்ததம்மா வாழ்க்கை என்னும் படகில் இயேசு என்றும் என்னோடிருப்பாரம்மா துன்பங்கள் ஏதும் வந்தாலும் பயமே எனக்கு இல்லையம்மா