I Levi

Isravelin Thuthigalil Vaasam

இஸ்ரவேலின் துதிகளில் வாசம்

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே -2 ஓ..ஹோ …..
வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் -2

இனி நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயம் எடுப்போம் -இஸ்ரவேலின்

எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்-2
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் -2 -இனி நீர்

செங் கடலை கண்டு சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம் -2
பயப்படாதே முன்செல்கிறேன்
என்றுரைத்து எம்மை நடத்தி வந்தீர் -2 -இனி நீர்

எதிரியின் படை எம்மை சூழும் போது
ஓங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர் -2
பாட செய்தீர் துதிக்க செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்க செய்தீர் -2 -இனி நீர்