I Levi

Ithuvarai Nadathi Kuraivinri Kaathu

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா -2
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் -2

நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன் -2 -இதுவரை நடத்தி

ஆபத்து நாளில் அனுகூலமான
துணையுமானீரே நன்றி ஐயா -2 – நன்றி நன்றி

உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா -2 -நன்றி நன்றி

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயன்படச் செய்தீரே நன்றி ஐயா -2 – நன்றி நன்றி

கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா -2 – நன்றி நன்றி