துதி கீதங்களால் புகழ்வேன்
துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்துவங்களை
இயேசுவே இரட்சகர்
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்
தினந்தோறும் உம் தானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்!
அலைமோதும் இவ்வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோடடியார்களை காருண்யத்தால்
உம்மைத் துதிக்கும் வேளையிலே
ஊக்கம் அளித்த கிருபையல்லோ
உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே
என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்!
வானம் பூமியை படைத்தவரே
வாரும் என்று அழைக்கிறோமே
என்று வந்திடுவீர், ஆவல் தீர்ந்திடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்
துன்ப துயரங்கள் வாட்டும்போது
வேத வசனங்கள் ஆறுதலே
சங்கீதங்களால் மகிழ் பாடிடுவேன்
உந்தன் வாக்குகளை எண்ணி ஆனந்தாய்
வேத வசனங்கள் ஆறுதலே
சங்கீதங்களால் மகிழ் பாடிடுவேன்
உந்தன் வாக்குகளை எண்ணி ஆனந்தாய்