A

Aa Ambara Umbara

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ!

அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!

ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் – ஆ!

ஞானியர் தேட வானவர் பாட – மிக
நன்னய உன்னத – பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் – ஆ!

கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் – ஆ!

விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் – ஆ!