ஆட்கொண்ட நல் நேசர்
ஆட்கொண்ட நல் நேசர் என் இயேசு தேவா
என்னையே தந்தேனே
எந்நாளும் பரிசுத்தம் காட்டுவேன்
என்றென்றும் உம்மை சேவிப்பேன்
என்றும் உம்மை சேவித்திட
நல்ல பங்கை கண்டடைந்தேன்
இயேசுவே பின் செல்வேன்
என்றுமவர் தாங்கி என்னை வழி நடத்திடுவீர்
ஜீவ பலியாய் ஒப்படைத்தேன்
மாம்சம் சாக அர்ப்பணித்தேன்
இயேசுவே தந்தேனே
என்னையே ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணம் செய்தேன்
உந்தன் நாமம் உயர்த்துவேன்
மகிழ்ச்சி பெலனை தந்தவரே
இயேசுவே நம்பிடுவேன்
உம்மிலே என்றுமாய் மகிழ்ந்திடுவேனே