A

Aandvar Aalayam Aarathanai

ஆண்டவர் ஆலயம் ஆராதனை நம்மை

ஆராதனை ஆராதனை ஆராதனை

ஆண்டவர் ஆலயம் ஆராதனை நம்மை
அவருடன் இணைக்கும் அன்பின் கணை

பொங்கும் இதயம் சிரிக்கட்டுமே
அவர் புகழை எந்நாளும் உரைக்கட்டுமே
ஏங்கும் இதயம் உணரட்டுமே அங்கு
ஓங்கும் கிருபைகள் தாங்கட்டுமே

நாமமே இயேசுவின் ஆலயமாம்
அவர் நாடும் நல்ல இருப்பிடமாம்
தூய தேவனைத் துதித்திடுவோம் அவர்
தேவ ஆவியால் நிரப்பிடுவார்

ஆவியோடும் உண்மையோடும்  ஆராதிப்போம்
நான் ஆனந்தமாய் ஆர்ப்பரித்து ஸ்தோத்திரிப்போம்
புத்தியுள்ள பக்தியாலே கர்த்தர் இயேசுவை நித்தம்
நித்தம் போற்றியே துதித்திடுவோம்