A Paamalaigal

Agamangal Pugazh Vedha

ஆகமங்கள் புகழ்

ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ! வாகு தங்கு குருநாதா, நமோ நமோ!
ஆயர் வந்தனைசெய் பாதா, நமோ நமோ, – அருரூபா

மாகமண்டல விலாசா, நமோ நமோ! மேகபந்தியி னுலாசா, நமோ நமோ!
வான சங்கம விஸ்வாசா, நமோ நமோ, – மனுவேலா

நாகவிம்பம் உயர் கோலா, நமோ நமோ! காகமும் பணிசெய் சீலா, நமோ நமோ!
நாடும் அன்பர் அனுகூலா, நமோ நமோ, – நரதேவா

ஏக மந்த்ரமுறு பூமா, நமோ நமோ! யூக தந்த்ரவதி சீமா, நமோ நமோ!
ஏசு வென்ற திருநாமா, நமோ நமோ, – இறையோனே!

அறிவி னுருவாகிய மூலா, நமோ நமோ! மறையவர்கள் தேடிய நூலா, நமோ நமோ! அதிசய பராபர சீலா, நமோ நமோ, – அருளாளா

பொறிவினை யுறாத சரீரா, நமோ நமோ! குறையணுவிலாத குமாரா, நமோ நமோ! புவன முழுதாள் அதிகாரா, நமோ நமோ, – புதுவேதா

நிறைவழியின் மேவிய கோனே, நமோ நமோ! முறைகள் தவறாத விணோனே, நமோ நமோ! நிதிபெருகு மாரச தேனே! நமோ நமோ, – நெறிநீதா

இறை தவிது பாடிய கீதா, நமோ நமோ! பறைகள்பல கூடிய போதா, நமோ நமோ! எருசலை யினீடிய நாதா, நமோ நமோ, – இறையோனே.