அம்மாவும் நீரே
அம்மாவும் நீரே – எங்க அப்பாவும் நீரே – பேர்
சொல்லி அழைத்தீரே என்னை
அள்ளி அணைத்தீரே – இந்த
உலகில் உம்மைத்தவிர
எனக்கு எவரும் இல்லையே – இந்த
உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே
தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்
தந்தை முகம் பார்த்ததில்லை
சொந்தமென்றும் பந்தம் என்றும்
சொல்லிக் கொள்ள எவரும்மில்லே
நான் உமக்கு சொந்தமானேன்
நீர் எனக்குத் தந்தையானீர்
தீங்கு வரும் நாளினிலே
செட்டைகளின் மறைவினிலே
பத்திரமாய் – பாதுகாக்கும்
பாசமுள்ள ஆண்டவரே
நீர் செய்த நன்மைகளை
நான் மறப்பது நியாயமில்லை
இல்லை என்று சொல்லி அழுதா
இயேசு அதை சகிப்பதில்லை
பிள்ளைகள் நாம அழுதா
அப்பா மனம் பொறுப்பதில்லே
நீர் மட்டும் இல்லையென்றால்
நான் உயிர் வாழ்வதுமில்லை