அகிலமெங்கும் செல்ல வா
அகிலமெங்கும் செல்ல வா
ஆண்டவர் புகழை சொல்ல வா
மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
கீழ்படிந்து எழுந்து வா
ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவா
ஆயிரமாயிரம் மனங்களை
ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
திருச்சபையாய் இணைக்க வா
தேவை நிறைந்த ஓர் உலகம்
தேடி செல்ல தருணம் வா
இயேசுவே உயிர் என முழங்கவா
சத்திய வழியை காட்ட வா
நோக்கமின்றி அலைந்திடும்
அடிமை வாழ்வு நடத்திடும்
இளைஞர் விலங்கை உடைக்க வா
சிலுவை மேன்மையை உணர்த்த வா